Saturday, December 18, 2010

"மகளிர் மட்டும்" வங்கிகள் : கர்நாடகா அதிரடி

கர்நாடக மாநிலத்தில், பெண்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக திகழ்வதாகவும், அவர்‌களை மேலும் மேம்படுத்தும் பொருட்டு, மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பெண்கள் மட்டும் செயலாற்றத்தக்க வகையிலான கட்டமைப்புடன் கூடிய "மகளிர் மட்டும்" வங்கிகளை அமைக்க தீர்மானித்திருப்பதாக, முதல்வர் எ‌டியூரப்பா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் எடியூரப்பா பிறப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துளளதாவது : தங்களது அரசு, ஏற்கனவே, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு உதவி செய்து வருவதாகவும், இதுவரை கிராம பஞ்சாயத்துகளுக்கு, பெண்கள் சுய உதவிகுழுக்களின் மூலம், ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் நலன் தொடர்பான திட்டங்களில் தமது அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?

இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்"  எனும் வட வேத ...