டுவிட்டர் சோஷியல் நெட்வொர்க் தளமானது வெகு விரைவில் செய்திச் சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இணையத்தளத்தில் பல லட்சக்கணக்கான குறுந்தகவல்கள் தினமும் பரிமாறப்படுவதால் செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் சிரமமிருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது. டுவிட்டர் இணையத்தள ஸ்தாபகர்களில் ஒருவரான பிஸ் ஸ்டோன் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். “டுவிட்டர் செய்திச் சேவையினூடாக உலகில் எந்தப் பாகத்திலும் நடக்கும் செய்திகளையும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் வழங்க முடியும் என எதிர்பார்க்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். டுவிட்டர் இணையத்தளமானது செய்திச் சேவை தொடர்பாகவும் தனது பாவனையாளர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் தற்போது பரீட்சார்த்தமாக ஆராய்ந்துவருகிறது. சுமார் 190 மில்லியன் எண்ணிக்கையிலான இணையப்பாவனையாளர்கள் டுவிட்டர் கணக்கினை தன்னகத்தே கொண்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி செக்கன் ஒன்றுக்கு சராசரியாக 750 டுவிட்டர் தகவல்கள் தரவேற்றப்படுகின்றன. இவ்வருட ஜூன் மாத புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நாளொன்றில் 65 மில்லியன் டுவிட்டர் தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன. இதனால் முன்னிலையிலுள்ள சமூக வலைப்பின்னல் இணையத்தளங்களில் பேசப்படும் ஒன்றாக டுவிட்டர் மாறிவருகிறது. இந்நிலையில் டுவிட்டர் இணையத்தளமானது செய்திச்சேவையை ஆரம்பிக்குமானால் ஏனைய தளங்களைவிட மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் பிந்திக் கிடைத்த தகவலின்படி, டுவிட்டர் இணையத்தளத்தின் தொடர்பாடல் பிரிவுத் தலைவர் மாறுபட்ட கருத்தொன்றை தெரிவித்துள்ளார். டுவிட்டர் சமூக வலைப்பின்னல் இணையத்தளத்துக்கு செய்திச்சேவை செய்யவேண்டிய தேவை தற்போது இல்லை என்றும் அது சரியான தீர்வாக அமையாதென்றும் குறிப்பிட்டுள்ளார். இருவரினதும் மாறுபட்ட கருத்துக்கள், தலைமையின் போட்டித் தன்மையை வெளிப்படுத்துவதாக இணையப் பாவனையாளர்கள் கூறியுள்ளதுடன் இந்த விடயம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வைகை நதி ஓடும் மாநகரத்தில் வாழும் எளிமையானவன். தான் அறிந்த தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்பவன்
Subscribe to:
Post Comments (Atom)
இதை நான் இன்னைக்கு கண்டுபுடிச்சது
தென்மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்களின் குரல் கொஞ்சம் கரடு முரடாக ரொம்ப Deep Base குரலாக இருக்கிறது...குறிப்பாக மதுரை, தேனி, திருநெல...
-
காதலித்து மணந்தவளை இறந்து விட்டாள் என நினைத்து சந்தர்ப்பவசத்தால், வேறு ஒரு பெண்ணை மணப்பார். இறந்தவளாக கருதப்பட்டவர் பார்வை இழந்த நிலையில் ...
-
சொந்தமாக கார் வாங்குவது பெரிய விஷயமல்ல. அதற்கு இன்சூரன்ஸ் எடுத்து முறையாக பிரிமியம் தொகை கட்டுவது தான் பெரிய விஷயம். அந்த வகையில் கார்களுக்க...
-
ஆற்றோரத்தில் ஜெபம் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. ஒரு குடிகாரனும் ஜெபத்தில் கலந்துக்கொள்ள நேறிடுகிறது வருகிறான்.குடிகாரன் பாதிரியாரின் அருகில...

No comments:
Post a Comment