Thursday, November 18, 2010

ரெட்டை அர்த்த நகரத்திற்கு போகலாம் வாரீகளா !!!!

சிங்கப்பூர் பூவுலகின் சொர்க்கம், அழகின் உச்சம், மனிதனின் சாதனை நகரம், உலகின் சுற்றுலா ரசிகர்களின் முக்கிய  இடம் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம், ஃபைன் சிட்டி(fine city) என்று இரட்டை அர்த்தத்தில்  சொல்லப்படும்... ஒன்று அழகான சிட்டி என்றும் இன்னொன்று அபராதம் விதிக்கப்படும் சிட்டி என்றும் இரட்டை  பொருளில் சொல்லப்படும்...

உலகில் குடிசைப்பகுதியில்லாத(slum) ஒரே நாடு, சிங்கப்பூரின் பெரும்பாலான குடிமகன்களுக்கு சொந்தவீடு,  எங்கெங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதையே பார்த்துள்ள நமக்கு ஊழல் என்பது கிட்டத்தட்ட இல்லாத(nil)  நாடாகவும் குற்றச்செயல்கள் என்பதும் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும் நாடு சிங்கப்பூர்...

இரவு 12 மணிக்கு உடல்முழுக்க நகையணிந்து தனியே ஒரு பெண் செல்லும் நாள் என்னும் காந்தி கனவை தினம்  தினம் நனவாக்கி கொண்டிருக்கும் நாடு...

என் மொழியை மட்டுமே படிக்கவேண்டும் என் மதம் மட்டுமே இருக்க வேண்டும் என் இனம் மட்டுமே என்று  இனவெறி பிடித்தலையும் கொலைகார நாடுகளை பார்த்துக்கொண்டிருக்கும் உலகில் அவரவர் தாய் மொழியை  படியுங்கள், அவரவர் தாய்மொழியை மதியுங்கள், அவரவர் மதங்கள் அவரவர்களுக்கு என்று பல்தேசிய மக்களும்  ஒன்றிணைந்து வாழும் சிங்கப்பூர் உலகின் அதிசயங்களில் ஒன்று...

சிங்கப்பூர் சிறிய நாடு என்பது பெரும்பாலும் அறிந்ததே, சிறியது என்றால் தமிழ்நாடு அளவு இருக்குமா? இலங்கை  அளவு இருக்குமா என்றுதான் முதலில் நினைத்தேன், அதனினு சிறிது கிட்டத்தட்ட பாதி பெங்களூர், கால்வாசி  சென்னை அவ்வளவுதான்.


சிங்கப்பூரின் கடைக்குட்டியான சிங்கப்பூர் ஃப்ளையர் எனப்படும் உலகின் மிக உயரமான Observation  wheel என்பதிலிருந்து சிங்கப்பூரின் பழமையை காண்பிக்கும் புலாவுபின் தீவு வரை எக்கச்சக்கமான சுற்றுலா  தளங்கள்...

சென்னை 2 சிங்கப்பூர் செல்ல நிறைய விமான சேவைகள் உள்ளன, விசா நடைமுறைகளும் ஓரளவுக்கு  எளிதானவையே... சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணை தூதரகத்திலேயே சுற்றுலா விசா பெற்றுக்கொள்ளலாம், 

டூரிஸ்ட் விசா பெற மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது

1. உங்களுடைய கடவுச்சீட்டு(Passport) குறைந்த ஆறுமாதத்திற்காவது(at least 6 months  validity) இருக்க வேண்டும்

2.சிங்கப்பூர் சென்று மீண்டும் திரும்பி வருவதற்கான வானூர்தி சீட்டு இருக்க வேண்டும்(A confirmed  onward/return ticket),

3. உள்ளூர்(சிங்கப்பூர்) அழைப்பாளர்(sponsor) இல்லாத நிலையில் சில நூறு அமெரிக்க / சிங்கப்பூர்  டாலர்கள் அல்லது கடன் அட்டை(credit card) காண்பிக்கப்பட வேண்டும்.

இவைகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் சிங்கப்பூர் விசாவுக்கான படம்(அறிவுறுத்தப்பட்ட  அளவுகளில்)கொடுத்தால் மூன்றிலிருந்து நான்கு வேலை நாட்களுக்குள் விசா கிடைத்துவிடும்.

விசா வாங்கியாச்சா? பாஸ்போர்ட் தயாரா? அப்புறமென்ன கிளம்புங்க சிங்கப்பூருக்கு......

No comments:

Post a Comment

தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?

இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்"  எனும் வட வேத ...