Saturday, November 27, 2010

Kamalhassan : விளம்பரப் படங்களில் நடிக்கிறார் கமல்ஹாசன்

ஒன்று இரண்டு படங்களில் தலை காட்டிய ஹீரோக்கள் கூட இன்று விளம்பரப் படவுலகில் சிறந்த வியாபாரிகளாக வலம் வந்துகொண்டிருக்க, ஐம்பது வருடத்தை கடந்து தமிழ் சினிமாவில் சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டிருக்கும் கமல்ஹாசன், ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்த போதிலும் விளம்பரப் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது ஒரு நல்ல செயலுக்காக விளம்பரப் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் உலகநாயகன். ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுகளின் கல்வி, ஊட்டச்சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் போன்றவற்றுக்கு நிதி திறட்டும் நோக்கத்தோடு தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. "பெற்றால்தான் பிள்ளையா" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், "எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது நாம் ஒவ்வொருவரின் கடமை. இதை நான் செய்வதற்காக என்னை யாரும் பாராட்ட வேண்டாம். கடமையை செய்ய எதற்கு பாராட்டு. இது போல செய்ய இன்னும் நிறைய இருக்கிறது. இதுபோன்ற குழந்தைகளுக்காக உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்காக நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். 25 வருடமாக நான் செய்யாத ஒரு விஷயத்தை செய்யப்போகிறேன். நான் வேண்டாம் என்று ஒதுக்கி வந்த ஒன்று. விளம்பரப் படங்களில் நடிப்பதை இந்த குழந்தைகளுக்காக செய்யப்போகிறேன். நான் ஒரு பொருளை விற்பனை செய்ய வியாபாரி இல்லை. நான் நடிகன் அதனால் என்னுடைய நடிப்பு வேலையை செய்துவந்தேன். இப்போது எச்.ஐ.வி. குழந்தைகளின் நலனுக்காக விளம்பரப் படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறேன். விளம்பரப் படத்தில் நடிப்பதால் எனக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை வரி இல்லாமல் அப்படியே எச்.ஐ.வி. குழந்தைகளின் நலனுக்கு கொடுக்க எந்த நிறுவனம் தயாராக இருக்கிறதோ அந்த நிறுவனத்தின் விளம்பர படத்தில் நான் நடிக்க தயார். அதுபோல அரசாங்கத்திடமும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். இதுபோன்ற குழந்தைகளுகளூக்கு என்னை போன்றவர்கள் செய்வதை விட இரண்டு மடங்கு அதிகமாக அரசாங்கம் செய்ய வேண்டும்" என்றார். அரசாங்கம் இரண்டு மடங்கு உதவிகளை செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களே, நீங்கள் இந்த குழந்தைகளுக்காக ஏதாவது குறிப்பிட்ட தொகை நிர்ணயித்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "என்னை வைத்து விளம்பரப் படம் எடுக்கும் நிறுவனங்கள் எனக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்களோ அதை அப்படியே நான் கொடுத்து விடுவேன். அதில் ஒரு பைசாவை கூட நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். அது ஐந்து கோடியாக இருந்தாலும் சரி. அப்போது அரசாங்கம் பத்து கோடியாக இவர்களுக்கு கொடுக்க வேண்டும்" என்று பதில் அளித்த கமல்ஹாசன், "எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருவரை என்னிடம் அழைத்து வந்தார்கள் அவர்களை பார்த்தபோது நமக்கு இன்னும் கடமைகள் இருக்கிறது என்று எனக்கு தோன்றியது. அந்த கடமை பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கும் இருக்கிறது. அதனால்தான் நாம் இணைந்து செயல்படுவோம் என்றேன்" என்றார்.

No comments:

Post a Comment

தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?

இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்"  எனும் வட வேத ...