Tuesday, February 8, 2011

கார் இன்சூரன்ஸ் பிரிமியம் தொகை குறைப்பது எப்படி?

சொந்தமாக கார் வாங்குவது பெரிய விஷயமல்ல. அதற்கு இன்சூரன்ஸ் எடுத்து முறையாக பிரிமியம் தொகை கட்டுவது தான் பெரிய விஷயம். அந்த வகையில் கார்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பிரிமியம் தொகையை கணக்கிட பல அம்சங்களை எடுத்துக் கொள்கின்றன. காரின் மாடல், எந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்டது, பெட்ரோல், டீஸல் அல்லது காஸில் ஓடுவதா, பெட்ரோல் டேங்கின் அமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கருவிகள் ஆகிய விஷயங்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கவனிக்கின்றன. இதன் காரணமாக, இன்சூரன்ஸ் பிரிமியம் தொகையில் 2.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை மாறுபாடு காணப்படுகிறது.
டீஸல், சி.என்.ஜி., அல்லது எல்.பி.ஜி.,யில் ஓடும் காரை விட, பெட்ரோலில் ஓடும் காருக்கு பிரிமியம் தொகை குறைவாக இருக்கும். டீஸல் இன்ஜின் காரை பயன்படுத்துபவர், அந்த காரை கூடுதலாக பயன்படுத்துவார். ஆனால், பெட்ரோலில் ஓடும் காரின் பயன்பாடு குறைவாகவே இருக்கும். எனவே, டீஸல்  பெட்ரோலில் ஓடும் கார்களுக்கு இடையே, இன்சூரன்ஸ் பிரிமியம் தொகையில் 10 முதல் 15 சதவீதம் வரை வேறுபாடு உள்ளது. இதே போல பைபரில் உள்ள பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்ட கார் என்றால், 3 முதல் 4 சதவீதம் கூடுதல் பிரிமியம் தொகை வசூலிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்: காரில், கியர் மற்றும் ஸ்டியரிங் வீல் லாக்குகள், ஏர் பேக்ஸ், சென்ஸார்கள், திருட்டை தடுக்கும் கருவிகள், உயிர் காக்கும் கருவிகள் இருந்தால், பிரிமியம் தொகை குறைவாக இருக்கும். மாருதி கார்களில், கார் நிறுவனம் தரும் உண்மையான சாவியை போட்டு காரை ஸ்டார்ட் செய்யாமல், மாற்று வழியில் காரை இயக்க முற்பட்டால், காரை இயங்க விடாமல் செய்யும் அளவுக்கு," ஐகேட் சிஸ்டம்' என்ற பாதுகாப்பு அம்சம் உள்ளது. எனவே, மற்ற நிறுவன கார்களை விட மாருதி கார்களுக்கு 10 சதவீதம் குறைவாகவே பிரிமியம் தொகை வசூலிக்கப்படுகிறது. அடுத்து இன்சூரன்ஸ் நிறுவனங்கள், காரின் ரீசேல் மதிப்பை கணக்கிடுகின்றனர். கார் திருடர்கள், ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள்(எஸ்.யு.வி.,) பிரிவை சேர்ந்த கார்களையே அதிகம் திருடுகின்றனர். மேலும், இவ்வகை கார்கள், நாட்டின் பல இடங்களில் வர்த்தக வாகனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே வட மாநிலங்களில் எஸ்.யு.வி., கார்களுக்கு 20 சதவீதம் கூடுதல் பிரிமியம் வசூலிக்கப்படுகிறது.
கார் உரிமையாளர்கள் தங்களின் கார்களில் விலை உயர்ந்த கருவிகளை பொருத்துகின்றனர். குறிப்பாக, விலை உயர்வான ஆடியோ சிஸ்டம் பொருத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இதுபோன்ற விலை உயர்வான கருவிகளால், பிரிமியம் தொகையும் அதிகரிக்கும் என்பதே உண்மை.

சில கார்களின் விலை குறைவாக இருக்கும். ஆனால், அந்த கார்களின் உதிரி பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். குறிப்பாக, இறக்குமதி செய்யப்படும் கார்களின் உதிரி பாகங்கள் விலை அதிகமாகவே இருக்கும். இந்த கார்களுக்கு கூடுதல் பிரிமியம் தொகை வசூலிக்கப்படும். அதே நேரத்தில் உள் நாட்டில் கிடைக்கும் உதிரி பாகங்களை கொண்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கார்களுக்கு, 10 முதல் 20 சதவீதம் குறைத்து பிரிமியம் தொகை வசூலிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் காரின் வண்ணமும் இன்சூரன்ஸ் பிரிமியம் தொகையை அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக சிவப்பு நிற கார்களுக்கு பிரிமியம் தொகை அதிகமாக இருக்கும். இந்தியாவிலும் இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது. பளீச்சென இருக்கும் வண்ணம் கொண்ட கார்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றன என்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்திய ஆட்டோமொபல் சங்கம் நடத்தும் பாதுகாப்பான பயணம் தொடர்பான கருத்தரங்குகளில் பங்கேற்பவர்களுக்கு, பிரிமியம் தொகை குறையும். இதே போல டாக்டர், ஆடிட்டர் போன்றவர்களுக்கு குறைந்த அளவு பிரிமியம் தொகை வசூலிக்கப்படுகிறது. இவர்கள் சாலையில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்வார்கள், கார்களை மிகவும் கவனத்துடன் கையாளுவார்கள் என்ற நம்பிக்கையே இந்த சலுகைக்கு காரணமாக கூறப்படுகிறது. இதே போல காரின் உரிமையாளர் 45 வயதுக்கு மேலாக இருந்தால், கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது.

சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள், குறைந்த அளவு பிரிமியம் தொகை என்ற கவர்ச்சி திட்டங்களை அறிவிப்பார்கள். ஆனால், அந்த இன்சூரன்ஸ் பிரிவில், சில விபத்துக்களுக்கு காப்பீடு கிடைக்காது என்பதே உண்மை. மும்பையில் சில ஆண்டுகளுக்கு முன் மழை வெள்ளம் ஏற்பட்டு பல கார்கள் பாதிப்புக்குள்ளாகின. அதன் உரிமையாளர்கள் காப்பீடு கேட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களை அணுகிய போது, அவர்கள் சேர்ந்துள்ள இன்சூரன்ஸ் திட்டத்தில் வெள்ள பாதிப்பு சேர்க்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. எனவே, கவனமாக கார் ஓட்டுவது மட்டும் முக்கியமல்ல. காருக்கு சரியான இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்து இருக்க வேண்டும் என்பது முக்கியம் தான்.

Saturday, February 5, 2011

"நண்பேன்டா"வுக்கு இதுதான் காரணம்

லண்டன்: தனக்கு ஏற்ற நண்பராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஒருவரது மரபணு தான் தீர்மானிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிந்துள்ளது. மனிதர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணநலன்கள், தனிப்பட்ட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். அவர்களின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த
இயல்புகளை அவனது மரபணு தீர்மானிப்பதாக, மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதே போன்று, ஒருவர் தனக்கு ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை, அவரது மரபணு தான் தீர்மானிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மரபியல் பண்பு அல்லது மரபணு வகைகளின்படி, குறிப்பிட்ட ஆறு மரபணுக்கள், தங்களுக்கு ஏற்ற நண்பன் யார் என்பதை தீர்மானிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இளம் வயதில், எதிர் பாலினத்தவரிடம் ஏற்படும் ஆர்வம் அல்லது இனக்கவர்ச்சியைப் போன்றும், இனம் இனத்தோடு சேரும் என்பது போன்றும் இந்த மரபணுக்கள், தங்களுக்கு ஏற்ற நண்பர்கள் இவர்தான் என்று அடையாளம் காணுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Friday, February 4, 2011

மக்களின் மனம் கவர்ந்த ஐடியா!

புதுடில்லி : மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டியின் மூலம், மற்ற முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, அதிக வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்துள்ளது ஐடியா நிறுவனம். மொபைல் போன் எண்ணை மாற்றாமல், தான் விரும்பும் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளும் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹரியானாவில் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை‌‌ பெரும் வரவேற்பை பெற்றது. இதன்பின், நாடு முழுமைக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு தொலைதொடர்பு நிறுவனமும், தங்கள் நிறுவனத்தில் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை தொலைதொடர்பு கட்டுப்பாடு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வழங்க உத்தரவிட்டுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், மொபைல்நம்பர் போர்டபிலிட்டி வசதி மூலம் அதிகம் பயனடைந்த தொலைதொடர்பு நிறுவனமாக ஐடியா நிறுவனம் உள்ளது. டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஐடியா நிறுவனத்தில் 35 ஆயிரம் பேரும், வோடபோன் நெட்வொர்க்கில்  30 ஆயிரம், ஏர்செல் நெட்வொர்க்கில் 12 ஆயிரம் பேரும், ஏர்டெல் நெட்வொர்க்கில் 8 ஆயிரம் பேரும் புதிதாக இணைந்துள்ளனர்.

சூரிய கிரகணம் - கிரகணநாளில் பிறந்த புதிய கண்டுபிடிப்புகள்....

Photo courtesy NBC news வான்பரப்பில், சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியதாக உள்ளது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே...