புதுடில்லி : மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டியின் மூலம், மற்ற முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, அதிக வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்துள்ளது ஐடியா நிறுவனம். மொபைல் போன் எண்ணை மாற்றாமல், தான் விரும்பும் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளும் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹரியானாவில் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை பெரும் வரவேற்பை பெற்றது. இதன்பின், நாடு முழுமைக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு தொலைதொடர்பு நிறுவனமும், தங்கள் நிறுவனத்தில் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை தொலைதொடர்பு கட்டுப்பாடு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வழங்க உத்தரவிட்டுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், மொபைல்நம்பர் போர்டபிலிட்டி வசதி மூலம் அதிகம் பயனடைந்த தொலைதொடர்பு நிறுவனமாக ஐடியா நிறுவனம் உள்ளது. டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஐடியா நிறுவனத்தில் 35 ஆயிரம் பேரும், வோடபோன் நெட்வொர்க்கில் 30 ஆயிரம், ஏர்செல் நெட்வொர்க்கில் 12 ஆயிரம் பேரும், ஏர்டெல் நெட்வொர்க்கில் 8 ஆயிரம் பேரும் புதிதாக இணைந்துள்ளனர்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வைகை நதி ஓடும் மாநகரத்தில் வாழும் எளிமையானவன். தான் அறிந்த தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்பவன்
Subscribe to:
Post Comments (Atom)
இதை நான் இன்னைக்கு கண்டுபுடிச்சது
தென்மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்களின் குரல் கொஞ்சம் கரடு முரடாக ரொம்ப Deep Base குரலாக இருக்கிறது...குறிப்பாக மதுரை, தேனி, திருநெல...
-
காதலித்து மணந்தவளை இறந்து விட்டாள் என நினைத்து சந்தர்ப்பவசத்தால், வேறு ஒரு பெண்ணை மணப்பார். இறந்தவளாக கருதப்பட்டவர் பார்வை இழந்த நிலையில் ...
-
சொந்தமாக கார் வாங்குவது பெரிய விஷயமல்ல. அதற்கு இன்சூரன்ஸ் எடுத்து முறையாக பிரிமியம் தொகை கட்டுவது தான் பெரிய விஷயம். அந்த வகையில் கார்களுக்க...
-
ஆற்றோரத்தில் ஜெபம் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. ஒரு குடிகாரனும் ஜெபத்தில் கலந்துக்கொள்ள நேறிடுகிறது வருகிறான்.குடிகாரன் பாதிரியாரின் அருகில...

No comments:
Post a Comment