Saturday, February 5, 2011

"நண்பேன்டா"வுக்கு இதுதான் காரணம்

லண்டன்: தனக்கு ஏற்ற நண்பராக யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஒருவரது மரபணு தான் தீர்மானிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிந்துள்ளது. மனிதர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணநலன்கள், தனிப்பட்ட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். அவர்களின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த
இயல்புகளை அவனது மரபணு தீர்மானிப்பதாக, மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதே போன்று, ஒருவர் தனக்கு ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை, அவரது மரபணு தான் தீர்மானிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மரபியல் பண்பு அல்லது மரபணு வகைகளின்படி, குறிப்பிட்ட ஆறு மரபணுக்கள், தங்களுக்கு ஏற்ற நண்பன் யார் என்பதை தீர்மானிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இளம் வயதில், எதிர் பாலினத்தவரிடம் ஏற்படும் ஆர்வம் அல்லது இனக்கவர்ச்சியைப் போன்றும், இனம் இனத்தோடு சேரும் என்பது போன்றும் இந்த மரபணுக்கள், தங்களுக்கு ஏற்ற நண்பர்கள் இவர்தான் என்று அடையாளம் காணுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?

இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்"  எனும் வட வேத ...