Tuesday, November 30, 2010

தெருவிளக்குகளாகும் மரங்கள்.......

மின் சக்தியில்லாமல் தானாக ஒளிரக்கூடிய மரங்களை தாம் உருவாக்கிவருவதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்காலத்தில் இம்மரங்களை தெருவிளக்குகளுக்கு பதிலாக உபயோகப்படுத்தமுடியும்.

இதற்காக உடலில் இருந்து வெளிச்சத்தை வெளிப்படுத்தும் சிலவகையான பூச்சிகள் மற்றும் விலங்குகளின் மரபணுக்களில் சோதனை நடத்தப்பட்டுவருகின்றது. பயோலுமினசென்ஸ் எனப்படுவது (Bioluminescence) உடலில் இருந்து வெளிச்சத்தை வெளிப்படுத்தும் ஆற்றலாகும்.

இவ்வாற்றலானது குறிப்பிட்ட சில ஜீவராசிகளுக்கே சாத்தியமாக உள்ளது.இவற்றின் மரபணுக்களும் இதற்கான ஒரு காரணமாகும்.

எனவே மின்மினிப்பூச்சிகள் மற்றும் சில மின்னும் கடல்வாழ் பக்டீரியாக்களின் மரபணுக்களைக் கொண்டும் ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.இவை வெற்றிகரமான முடிவுகளைத் தந்துள்ளன.

இவை மரங்களுக்கு மட்டுமன்றி ஒளிரும் பல்வேறு பல்வேறு பொருட்களுக்கும் பயன்படுத்த முடியுமெனவும் ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

Saturday, November 27, 2010

Kamalhassan : விளம்பரப் படங்களில் நடிக்கிறார் கமல்ஹாசன்

ஒன்று இரண்டு படங்களில் தலை காட்டிய ஹீரோக்கள் கூட இன்று விளம்பரப் படவுலகில் சிறந்த வியாபாரிகளாக வலம் வந்துகொண்டிருக்க, ஐம்பது வருடத்தை கடந்து தமிழ் சினிமாவில் சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டிருக்கும் கமல்ஹாசன், ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்த போதிலும் விளம்பரப் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது ஒரு நல்ல செயலுக்காக விளம்பரப் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் உலகநாயகன். ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுகளின் கல்வி, ஊட்டச்சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் போன்றவற்றுக்கு நிதி திறட்டும் நோக்கத்தோடு தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. "பெற்றால்தான் பிள்ளையா" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், "எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது நாம் ஒவ்வொருவரின் கடமை. இதை நான் செய்வதற்காக என்னை யாரும் பாராட்ட வேண்டாம். கடமையை செய்ய எதற்கு பாராட்டு. இது போல செய்ய இன்னும் நிறைய இருக்கிறது. இதுபோன்ற குழந்தைகளுக்காக உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்காக நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். 25 வருடமாக நான் செய்யாத ஒரு விஷயத்தை செய்யப்போகிறேன். நான் வேண்டாம் என்று ஒதுக்கி வந்த ஒன்று. விளம்பரப் படங்களில் நடிப்பதை இந்த குழந்தைகளுக்காக செய்யப்போகிறேன். நான் ஒரு பொருளை விற்பனை செய்ய வியாபாரி இல்லை. நான் நடிகன் அதனால் என்னுடைய நடிப்பு வேலையை செய்துவந்தேன். இப்போது எச்.ஐ.வி. குழந்தைகளின் நலனுக்காக விளம்பரப் படங்களில் நடிக்க முடிவெடுத்திருக்கிறேன். விளம்பரப் படத்தில் நடிப்பதால் எனக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை வரி இல்லாமல் அப்படியே எச்.ஐ.வி. குழந்தைகளின் நலனுக்கு கொடுக்க எந்த நிறுவனம் தயாராக இருக்கிறதோ அந்த நிறுவனத்தின் விளம்பர படத்தில் நான் நடிக்க தயார். அதுபோல அரசாங்கத்திடமும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். இதுபோன்ற குழந்தைகளுகளூக்கு என்னை போன்றவர்கள் செய்வதை விட இரண்டு மடங்கு அதிகமாக அரசாங்கம் செய்ய வேண்டும்" என்றார். அரசாங்கம் இரண்டு மடங்கு உதவிகளை செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களே, நீங்கள் இந்த குழந்தைகளுக்காக ஏதாவது குறிப்பிட்ட தொகை நிர்ணயித்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "என்னை வைத்து விளம்பரப் படம் எடுக்கும் நிறுவனங்கள் எனக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்களோ அதை அப்படியே நான் கொடுத்து விடுவேன். அதில் ஒரு பைசாவை கூட நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். அது ஐந்து கோடியாக இருந்தாலும் சரி. அப்போது அரசாங்கம் பத்து கோடியாக இவர்களுக்கு கொடுக்க வேண்டும்" என்று பதில் அளித்த கமல்ஹாசன், "எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருவரை என்னிடம் அழைத்து வந்தார்கள் அவர்களை பார்த்தபோது நமக்கு இன்னும் கடமைகள் இருக்கிறது என்று எனக்கு தோன்றியது. அந்த கடமை பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கும் இருக்கிறது. அதனால்தான் நாம் இணைந்து செயல்படுவோம் என்றேன்" என்றார்.

Twitter : புது அவதாரம்

டுவிட்டர் சோஷியல் நெட்வொர்க் தளமானது வெகு விரைவில் செய்திச் சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இணையத்தளத்தில் பல லட்சக்கணக்கான குறுந்தகவல்கள் தினமும் பரிமாறப்படுவதால் செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் சிரமமிருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது. டுவிட்டர் இணையத்தள ஸ்தாபகர்களில் ஒருவரான பிஸ் ஸ்டோன் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். “டுவிட்டர் செய்திச் சேவையினூடாக உலகில் எந்தப் பாகத்திலும் நடக்கும் செய்திகளையும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் வழங்க முடியும் என எதிர்பார்க்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். டுவிட்டர் இணையத்தளமானது செய்திச் சேவை தொடர்பாகவும் தனது பாவனையாளர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் தற்போது பரீட்சார்த்தமாக ஆராய்ந்துவருகிறது. சுமார் 190 மில்லியன் எண்ணிக்கையிலான இணையப்பாவனையாளர்கள் டுவிட்டர் கணக்கினை தன்னகத்தே கொண்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி செக்கன் ஒன்றுக்கு சராசரியாக 750 டுவிட்டர் தகவல்கள் தரவேற்றப்படுகின்றன. இவ்வருட ஜூன் மாத புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நாளொன்றில் 65 மில்லியன் டுவிட்டர் தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன. இதனால் முன்னிலையிலுள்ள சமூக வலைப்பின்னல் இணையத்தளங்களில் பேசப்படும் ஒன்றாக டுவிட்டர் மாறிவருகிறது. இந்நிலையில் டுவிட்டர் இணையத்தளமானது செய்திச்சேவையை ஆரம்பிக்குமானால் ஏனைய தளங்களைவிட மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் பிந்திக் கிடைத்த தகவலின்படி, டுவிட்டர் இணையத்தளத்தின் தொடர்பாடல் பிரிவுத் தலைவர் மாறுபட்ட கருத்தொன்றை தெரிவித்துள்ளார். டுவிட்டர் சமூக வலைப்பின்னல் இணையத்தளத்துக்கு செய்திச்சேவை செய்யவேண்டிய தேவை தற்போது இல்லை என்றும் அது சரியான தீர்வாக அமையாதென்றும் குறிப்பிட்டுள்ளார். இருவரினதும் மாறுபட்ட கருத்துக்கள், தலைமையின் போட்டித் தன்மையை வெளிப்படுத்துவதாக இணையப் பாவனையாளர்கள் கூறியுள்ளதுடன் இந்த விடயம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Friday, November 26, 2010

"தண்ணீ"ரில் தத்தளித்த மதுரை.......








1 மாத மின்கட்டணம் 70 லட்சம் : இந்தியாவில் தான் இந்த நிலை!

மும்பை : இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி சமீபத்தில் புதிதாக குடியேறிய அரண்மனை வீட்டின் முதல் மாத மின் கட்டணம் ரூ.70 லட்சம் வந்துள்ளதாம். மும்பையில், 27 மாடிகளுடன் கூடிய வீட்டைக் கட்டியுள்ளார் முகேஷ் அம்பானி. உலகிலேயே மிகவும் ஆடம்பரமான வீடாக இது வர்ணிக்கப்படுகிறது. பெரும் பணக்காரரான பில் கேட்ஸுக்குக் கூட இப்படி ஒரு வீடு இல்லையாம். இந்த வீட்டில் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீத்தா மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார் முகேஷ். புது வீட்டுக்குப் போய் ஒரு மாதம்தான் ஆகிறது. இந்த மாபெரும் அரண்மனை வீட்டுக்கு சமீபத்தில்தான் குடி புகுந்தார் முகேஷ் அம்பானி. இப்போது இந்த வீட்டின் முதல் மாத மின்சார உபயோகக் கட்டணமாக ரூ.70 லட்சத்து 69 ஆயிரத்து 488 வந்துள்ளதாம். ஒரு வீட்டுக்கு இவ்வளவு அதிக கட்டணம் வந்திருப்பது மும்பை வரலாற்றில் இதுவே முதல் முறையாம். ஒரு மாதத்தில் மட்டும் 6 லட்சத்து 37 ஆயிரத்து 240 யூனிட் மின்சாரத்தை உபயோகப்படுத்தியுள்ளனர். ஒரு சாதாரண இந்தியக் குடும்பத்தில் அனைத்து மின்சார சாதனப் பொருட்களின் பயன்பாட்டையும் கூட்டிப் பார்த்தால் சராசரியாக 300 யூனிட் வரை பயன்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் என்ன விசேஷம் என்றால், கட்டணத்தை சரியாக கட்டியதால் முகேஷ் அம்பானிக்கு பில்லில், ரூ. 48 ஆயிரத்து 354 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாம். இதைக் கழித்து விட்டுத்தான் இந்த 70 லட்சம் ரூபாய் கட்டணம் கட்டியுள்ளாராம் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானி கட்டியுள்ள இந்த ஒரு மாத பில் கட்டணம், 7000 வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்திற்கு சமம் என்கிறார்கள்.

Wednesday, November 24, 2010

கேப்டன் இனி டாக்டர் கேப்டன்

அரசியல் தலைவர்கள், கல்விச்சேவை, மனிதநேய சேவை உள்ளிட்ட சேவைகளை செய்யும் சமூக சேவையாளர்கள், சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் கவுரவ டாக்டர் பட்டம் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கும் வழங்கப்பட இருக்கிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள, "இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.சி.எம்.,) என்ற பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் படத்திற்கு நடிகர் விஜயகாந்தை தேர்வு செய்துள்ளது. சிறப்பான முறையில் சமூக சேவையாற்றி வருவதற்காக இந்த பட்டம் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை, சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் வரும் டிசம்பர் 3ம்தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கான அழைப்பிதழ் அச்சடிப்பு, நிகழ்ச்சி ஏற்பாடு உள்ளிட்ட பணிகளில் தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அப்போ இனிமே கேப்டர் விஜயகாந்த் இல்ல... டாக்டர் விஜயகாந்த்னு சொல்லுங்க! 

Tuesday, November 23, 2010

ஈ.வெ.ரா.,வின் கொள்கை அது நேற்று..... இது இன்னிக்கு!!!!!!

இது இன்று (23-11-10)

முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை : நேற்று (22-11-10)

ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளையும், அண்ணாதுரையின் கோட்பாடுகளையும் நான் அடகு வைத்துவிட்டதாக ஜெயலலிதா பெயரில் அறிக்கை வெளிவந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை போன்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வாழ்த்துச் செய்தி கொடுத்தும், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு விமானத்தில் பறந்து சென்று, ரங்கநாதருக்கு பூஜை, நைவேத்தியம் செய்தும் ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளையும், அண்ணாதுரையின் கோட்பாடுகளையும் ஜெயலலிதா காப்பாற்றுவதை போல, நான் காப்பாற்றவில்லை என்கிறார் போலும்.என் அரசியல் குருகுலம் ஈ.வெ.ரா.,வின் ஈரோட்டில் தொடங்கியது என்பதை தமிழக மக்கள் அறிவர். ஜெயலலிதாவின் குருகுலம் எது என்பதையும் தமிழக மக்கள் நன்கறிவர். எனவே, என் கொள்கை, கோட்பாடு பற்றி விமர்சிக்க அவருக்கு தகுதி போதாது.

நியூயார்க் டைம்சிலும் ஸ்பெக்ட்ரம் செய்தி

ஸ்பெக்ட்ரம் முறைகேடு, சர்வதேச அளவில் பேசப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விட்டது. " தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையிலும் இதுகுறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து இடம் பெற்ற செய்தியை, இந்தியாவின் பிரபல ஆங்கில செய்தி சேனல் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சார்பில், ஒதுக்கீடு செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தொலைத் தொடர்புத் துறையிலோ, வர்த்தகத்திலோ, பின்னணி இல்லாத ராஜா என்பவர், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். சர்வதேச அளவில் மொபைல் போன் சந்தை மிக, வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு சற்றும் பொருத்தம் இல்லாத நபர், அத்துறையின் அமைச்சராக் கப்பட்டார். மத்திய அரசுக்கு தலைமை ஏற்றுள்ள, காங்கிரஸ் கட்சியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர் என்ற பலம் மட்டுமே இவருக்கு உண்டு. இதுகுறித்து புகார் எழுந்ததை அடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துவிட்டார். மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் சமீபகாலமாக ஊழல் புகாரில் சிக்கி தவித்து வருகின்றனர். இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஊழல்கள் அதுகுறித்து பேட்டிகள் என விலாவாரியாக வெளிவந்திருக்கிறது.

http://www.nytimes.com/2010/11/22/world/asia/22india.html?_r=1&scp=1&sq=raja&st=cse

Monday, November 22, 2010

சிலபசை தயாரித்த பிளஸ் 2 மாணவர்

இன்டர்நெட் பாதுகாப்பு குறித்த பாடத்திட்டத்தை தயாரித்து, பெங்களூரு மாணவன் சாதனை புரிந்துள்ளார். இந்த பாடத்திட்டம் விரைவில் அவர் படிக்கும் பள்ளிக்கூடத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பெங்களூருவில் உள்ள இன்டஸ் சர்வதேச பள்ளியில், பிளஸ் 2 படித்து வரும் மாணவர் சவுர்யா சலுஜா (17). பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக வலைதளங்களிலும், இன்டர்நெட்டிலும் மாணவர்கள் மூழ்கிக் கிடப்பதையும், இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதையும், கண்கூடாக பார்த்த சலுஜாவிற்கு, இதுகுறித்த விழிப்புணர்வை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் எண்ணம் துளிர்விட்டது. இதை தொடர்ந்து, இன்டர்நெட் பயன்படுத்தும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகளை அடிப்படையாக வைத்து, பாடத்திட்டம் தயாரிக்கும் பணியில் சுறுசுறுப்பாக களமிறங்கினார். தனது எண்ணத்துக்கு உயிர் கொடுக்க, பஞ்சாபை சேர்ந்த இன்டர்நெட் பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் உதவியை நாடினார். அங்கு இன்டர்நெட் பாதுகாப்பு குறித்து இரண்டு வாரங்கள் பயிற்சி பெற்ற சலுஜா, பெங்களூரு திரும்பியதும் இன்டர்நெட் பாதுகாப்பு பாடத்திட்டம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக களமிறங்கினார். இன்டர்நெட் நன்னெறிகள் (சைபர் எத்திக்ஸ்), வலைதளங்களும் நீங்களும் (நெட்வொர்க்ஸ் அண்ட் யூ), இன்டர்நெட் தற்காப்பு (புரோக்டெக்டிங் யுவர்செல்ப்), இன்டர்நெட் சட்டங்கள் (சைபர் லாஸ்) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் பாடத்திட்டங்களை தயாரித்தார். இந்த பாடத்திட்டத்தை அவர் படிக்கும் இன்டஸ் சர்வதேச பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்தது. பின் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு இன்டர்நெட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒன்பது முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு இந்த பாடத்திட்டத்தை சேர்க்க முடிவு செய்து, விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சவுர்யா சலுஜா கூறியதாவது: நான் மலேசியாவில் படித்து கொண்டிருந்த போது, இதுபற்றிய பலர் என்னிடம் பேசுவர். இதனால் அங்கு மாணவர்களிடையே விழிப்புணர்வு அதிகம். ஆனால் இங்கு இன்டர்நெட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாணவர்களிடம் யாரும் பேசுவதில்லை. எனவே இதை பாடத்திட்டமாக தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. அனைத்து பள்ளிகளிலும் இதை பாடத்திட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு சலுஜா கூறினார்.

Friday, November 19, 2010

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வி்த்தியாசம்

ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும், திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.அதற்கு அந்த ஞானி,''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ.அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ,அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை.நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது.''என்றார்.கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.ஞானி,''எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி?''என்று கேட்டார். சீடன் சொன்னான்,'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன்.இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன.அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன்.அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே.வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.'

புன்முறுவலோடு ஞானி சொன்னார்,''இது தான் காதல்.''

பின்னர் ஞானி,''சரி போகட்டும்,அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை.ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.''

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான்.ஞானி கேட்டார்,''இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா?''சீடன் சொன்னான்,'இல்லை குருவே,இதை விட அழகான செடிகள் இருக்கின்றன.ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்.நிபந்தனைப்படி,ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.'

இப்போது ஞானி சொன்னார்,''இது தான் திருமணம்.''

Thursday, November 18, 2010

ரெட்டை அர்த்த நகரத்திற்கு போகலாம் வாரீகளா !!!!

சிங்கப்பூர் பூவுலகின் சொர்க்கம், அழகின் உச்சம், மனிதனின் சாதனை நகரம், உலகின் சுற்றுலா ரசிகர்களின் முக்கிய  இடம் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம், ஃபைன் சிட்டி(fine city) என்று இரட்டை அர்த்தத்தில்  சொல்லப்படும்... ஒன்று அழகான சிட்டி என்றும் இன்னொன்று அபராதம் விதிக்கப்படும் சிட்டி என்றும் இரட்டை  பொருளில் சொல்லப்படும்...

உலகில் குடிசைப்பகுதியில்லாத(slum) ஒரே நாடு, சிங்கப்பூரின் பெரும்பாலான குடிமகன்களுக்கு சொந்தவீடு,  எங்கெங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பதையே பார்த்துள்ள நமக்கு ஊழல் என்பது கிட்டத்தட்ட இல்லாத(nil)  நாடாகவும் குற்றச்செயல்கள் என்பதும் மிகக்குறைந்த அளவிலேயே இருக்கும் நாடு சிங்கப்பூர்...

இரவு 12 மணிக்கு உடல்முழுக்க நகையணிந்து தனியே ஒரு பெண் செல்லும் நாள் என்னும் காந்தி கனவை தினம்  தினம் நனவாக்கி கொண்டிருக்கும் நாடு...

என் மொழியை மட்டுமே படிக்கவேண்டும் என் மதம் மட்டுமே இருக்க வேண்டும் என் இனம் மட்டுமே என்று  இனவெறி பிடித்தலையும் கொலைகார நாடுகளை பார்த்துக்கொண்டிருக்கும் உலகில் அவரவர் தாய் மொழியை  படியுங்கள், அவரவர் தாய்மொழியை மதியுங்கள், அவரவர் மதங்கள் அவரவர்களுக்கு என்று பல்தேசிய மக்களும்  ஒன்றிணைந்து வாழும் சிங்கப்பூர் உலகின் அதிசயங்களில் ஒன்று...

சிங்கப்பூர் சிறிய நாடு என்பது பெரும்பாலும் அறிந்ததே, சிறியது என்றால் தமிழ்நாடு அளவு இருக்குமா? இலங்கை  அளவு இருக்குமா என்றுதான் முதலில் நினைத்தேன், அதனினு சிறிது கிட்டத்தட்ட பாதி பெங்களூர், கால்வாசி  சென்னை அவ்வளவுதான்.


சிங்கப்பூரின் கடைக்குட்டியான சிங்கப்பூர் ஃப்ளையர் எனப்படும் உலகின் மிக உயரமான Observation  wheel என்பதிலிருந்து சிங்கப்பூரின் பழமையை காண்பிக்கும் புலாவுபின் தீவு வரை எக்கச்சக்கமான சுற்றுலா  தளங்கள்...

சென்னை 2 சிங்கப்பூர் செல்ல நிறைய விமான சேவைகள் உள்ளன, விசா நடைமுறைகளும் ஓரளவுக்கு  எளிதானவையே... சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணை தூதரகத்திலேயே சுற்றுலா விசா பெற்றுக்கொள்ளலாம், 

டூரிஸ்ட் விசா பெற மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது

1. உங்களுடைய கடவுச்சீட்டு(Passport) குறைந்த ஆறுமாதத்திற்காவது(at least 6 months  validity) இருக்க வேண்டும்

2.சிங்கப்பூர் சென்று மீண்டும் திரும்பி வருவதற்கான வானூர்தி சீட்டு இருக்க வேண்டும்(A confirmed  onward/return ticket),

3. உள்ளூர்(சிங்கப்பூர்) அழைப்பாளர்(sponsor) இல்லாத நிலையில் சில நூறு அமெரிக்க / சிங்கப்பூர்  டாலர்கள் அல்லது கடன் அட்டை(credit card) காண்பிக்கப்பட வேண்டும்.

இவைகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் சிங்கப்பூர் விசாவுக்கான படம்(அறிவுறுத்தப்பட்ட  அளவுகளில்)கொடுத்தால் மூன்றிலிருந்து நான்கு வேலை நாட்களுக்குள் விசா கிடைத்துவிடும்.

விசா வாங்கியாச்சா? பாஸ்போர்ட் தயாரா? அப்புறமென்ன கிளம்புங்க சிங்கப்பூருக்கு......

Wednesday, November 17, 2010

எங்கே உக்காந்து தான் யோசிப்பாங்களோ!!!!!

படித்து விட்டு வேலைக்காக பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் நண்பர் ஒருவர், "ஆப்ஜக்டிவ் டைப்' தேர்வுகளில் (இவ்வகைத் தேர்வுகளில், ஒரு கேள்வி கேட்டு, அதற்கு நான்கு பதில்களைக் கேள்வித் தாளில் கொடுத்து இருப்பர்... அந்த நான்கில் எது சரியான விடை என்பதை, "டிக்' செய்தால் போதும்!) "புதுவிதமாக, காப்பி நடக்கிறது... அதை நீங்கள் நேரில் பார்த்தால், "இன்ட்ரஸ்டிங்' ஆக இருக்கும்... தேர்வு நடக்கும் நேரத்தில் சொல்கிறேன்... வருவீர்களா?' எனக் கேட்டார்...
"ஓ, வருகிறேன்... ஆனால், தேர்வு நேரங்களில் வெளியாட்களை உள்ளே விட மாட்டார்களே...' என்றேன்.
"கவலையை விடுங்கள்... நான் அழைத்துச் சென்று, வசமான இடத்தில் உங்களை உட்கார வைக்கிறேன்... அந்த இடத்தில் இருந்தே தேர்வு அறையின் உள்ளே நடப்பதை நீங்கள் தெளிவாகக் காணலாம்...' என்றார்.
அந்த நாளும் சமீபத்தில் வந்தது. நண்பர், தன் தேர்வு எழுதும் கல்லூரிக்கு அழைத்துச் சென்று, அவர் கூறியபடியே பாதுகாப்பான இடத்தில் அமர வைத்தார்.
மணி அடித்தது... அதுவரை பரபரப்பாக இருந்த கல்லூரி வளாகம் அமைதியானது. தேர்வு எழுத வந்தவர்கள் அவரவர் இருக்கையில் அமர, பரீட்சை பேப்பர் வினியோகம் ஆரம்பமானது.
எல்லாம் வழக்கப்படி நடக்க, ஒரு விஷயம் மட்டும் வினோதமாகப் பட்டது.
அது —
தேர்வு எழுத வந்தவர்களில் பலரும் நான்கு பேனாக்கள், பென்சில்கள், ரப்பர்கள் என மேசை மீதும், தத்தம் சட்டைப் பைகளிலும் வைத்து இருந்தனர். இரண்டு பேனாவும், ஒரு பென்சிலும், ஒரு ரப்பருமே அதிகப்படி எனும் போது, இத்தனை எதற்கு என எண்ணிக் கொண்டிருக்கும் போதே, தேர்வு எழுத வந்தவர்களின் சேஷ்டைகள் ஆரம்பமானது.
ஒரு பேனாவைத் தூக்கிக் காட்டுவதும், இரண்டு பேனாக்களைத் தூக்கிக் பிடிப்பதும், பேனா, பென்சில், ரப்பர் என எடுத்துக் காட்டுவதுமாக இருந்தனர்.
வாசகர் சொன்ன, "டுபாக்கூர்' வேலை இது தான் என்பது தெரிந்தாலும், விஷயம் முழுமையாகப் புரியவில்லை... தேர்வு முடித்து வந்த அந்த வாசகர் பின்னர் விளக்கினார்:
"நம்ம மக்கள் எந்த அளவுக்கு புத்திசாலிகள் என்பதற்கு ஓர் உதாரணத்தைப் பார்த்தீர்களா... சரியான விடை தெரிந்தவர்களிடமிருந்து விடைகளைப் பெற, மற்றவர்கள் சங்கேத அடையாளங்களை பயன்படுத்துகின்றனர். இதன்படி தலையைச் சொறிந்தால், முதல் விடை சரியானது. நெற்றியைத் தொட்டால், இரண்டாவது விடை சரியானது. அதே போல கண்ணைத் தொட்டால், மூன்றாவது விடையும், மூக்கைத் தொட்டால், நான்காவது விடையும் சரியானவை.
"சரி... கேள்விகள் நூறு வரை இருக்குமே... இதை எப்படி சொல்கின்றனர்...' எனக் கேட்டேன்.
"பேனா மூடி காட்டினால் ஒன்று. பேனாவைக் காட்டினால் இரண்டு, பென்சில் ஐந்து, ரப்பர் பத்து என மதிப்பு கொடுத்துள்ளனர்... கர்சிப் ஜீரோ. விடை கேட்பவர்கள் பேனா, பென்சில், ரப்பர் போன்றவற்றில் தலா மூன்று நான்கு வைத்திருப்பர். உதாரணமாக, இருபத்தாறாவது கேள்விக்கு விடை கேட்க வேண்டும் என்றால், ஒரு பேனா அதை அடுத்து ஒரு பென்சில், அதன் மேல் ஒரு பேனா மூடி என வைத்து விட்டு தேர்வு எழுத வந்திருக்கும் புத்திசாலியான நண்பனை ஒரு பார்வை பார்ப்பர். அவர் தலையையோ, மூக்கையோ, சொறிந்து சரியான விடையைச் சொல்வார். அதே போல், ஐம்பதாவது கேள்விக்கு விடை தேவை என்றால், பென்சிலை வைத்து அதை அடுத்து கர்சிப்பை வைப்பர்.
"இந்த சங்கேத அடையாளத்தை போட்டித் தேர்வு எழுத வருபவர்களும், கல்லூரி மாணவர்களும் பரவலாகப் பயன்படுத்துகின்றனர்!' என்றார் வாசகர்.
— இப்படி பரீட்சை பாஸ் பண்ணிட்டு வர்றவங்ககிட்ட இருந்து என்ன, "குவாலிட்டி' எதிர்பார்க்க முடியும்? 

Tuesday, November 16, 2010

ஆன்லைன் வர்த்தகம் பாதிக்கப்படுமா?- கட்டாயமாகிறது விபிவி மற்றும் எம்எஸ்சி

RBI  வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில் CW2 எனப்படும் செக்யூரிட்டி இப்பொழுது எல்லாவிதமான கிரிடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கும் January 01, 2011 யிலிருந்து கட்டாயமாக்கப்படுகிறது. அது வெளிநாட்டவர் இந்திய வெப்தளங்களில் செய்யும் Money Transactions அல்லது இங்குள்ளோர் வெளிநாட்டவர் தளங்களில் செய்யும் Transactions என எதுவாக இருந்தாலும் மேலும் இது IVR க்கும் பொருந்தும் என கூறியிருக்கிறது.

Verified by Visa, Mastercard Secure இந்த இரண்டும் இப்பொழுது எல்லா வகையான ஆன்லைன் சேவைகளிலும் (Card not present) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு ஆகஸ்டு 1 ம் தேதி முதல் அமுலில் உள்ளது. ஆனால் இது அமேரிக்க எக்ஸ்பிரஸுக்கு பொருந்தாது ஏனெனில் அது ஏற்கனவே billing address verification ஐ தன்னுடைய API யில் சேர்த்திருக்கிறது.

இது வேப் அப்ளிகேஷனான Ngpay யில் உள்ளதா என எனக்கு தெரியவில்லை. மொபைல் ப்ரொவுசரை பேங்க் தளத்திற்கு ரீடைரக்ட் செய்து பிறகு அது முடிந்தபின்பு மீண்டும் பழைய நிலைக்கு வருமா? இது J2ME யில் சாத்தியாமா என நீங்களதான் சொல்லவேண்டும்.

இந்த அதிகப்படியான செக்யூரிட்டி ஒரு விதத்தில் சரியென்று என சொன்னாலும் இதனால் பத்தில் ஒரு டிரான்சேக்ஷன் பாதிக்கபடுகிறது என்கின்றனர். வெளிநாட்டவர் வைத்துள்ளதுபோல் billing address verification, date of birth verification வைத்தால் அனைவருக்கும் ஞாபத்தில் வைக்க சுலபாக இருக்கும் என்கின்றனர் ஒரு சிலர். இதனால் Cash Mode வியாபாரம் சூடுபிடிக்கிறது. ITZ cash வைத்து IRCTC யும் NGPAY வும் வாழ்கிறது என்றால்  அது மிகையாகாது.

RBI யின் அறிக்கை இதுதான்

RBI Notice (source)
RBI/2010-2011/243
RBI / DPSS No.914/02.14.003/2010-2011
October 25, 2010
The Chairman and Managing Director / Chief Executive Officers
All Scheduled Commercial Banks including RRBs /
Urban Co-operative Banks / State Co-operative Banks /.
District Central Co-operative Banks
Authorised card payment networks
Madam / Dear Sir
Credit/Debit Card transactions- Security Issues and Risk mitigation measures for Card Not Present Transactions.
We had vide our circular RBI/2008-2009/ 387, DPSS No. 1501 / 02.14.003 / 2008-2009, dated February 18, 2009, mandated that with effect from August 01, 2009, banks shall provide an “additional authentication/validation based on information not visible on the cards for all on-line card not present transactions”. (This mandate has been extended to all IVR transactions with effect from January 01, 2011, vide our circular RBI/2009-2010/420, DPSS No. 2303 / 02.14.003 / 2009-2010 April 23, 2010)
2. We have been receiving references regarding the applicability of this mandate for online transactions effected using cards issued by banks outside India on Indian merchant sites, and the use of Indian cards for transactions on foreign websites.
3. In this regard, it is clarified that the mandate shall apply to all transactions using cards issued in India, for payments on merchant site where no outflow of foreign exchange is contemplated. The linkage to an overseas website/payment gateway cannot be the basis for permitting relaxations from implementing the mandate.
4. The mandate is not presently applicable for use of cards issued outside India, on Indian merchant sites.
Yours faithfully
G. Padmanabhan
Chief General Manager

Saturday, November 13, 2010

இ-மெயில் சேவையை துவக்குகிறது பேஸ்புக்

சோஷியல் நெட்வொர்க் இணையதளங்களின் ஜாம்பவானாக திகழும் பேஸ்புக், விரைவில் இ-மெயில் சேவையை துவக்குகிறது. இது மைக்ரோசாப்ட, யாகூ, கூகுள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுக்கு கடும்போட்டியாக அமையும் என்று நாளிதழ்கள் அவ்வப்போது செய்தி வெளியிட்ட வண்ணம் உள்ளன. ஆனால் இதுகுறித்த அறிவிப்பு பேஸ்புக் தரப்பிலிருந்து வரவில்லை. இந்நிலையில், அமெரிக்காவின் சிலிக்கான வேலி பகுதியில் இருந்து வெளியாகும் தொழில்நுட்ப வலை இதழான டெக்கிரஞ்ச்சில், இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது : சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெப் பேஸ்டு இ-மெயில் சேவையை பேஸ்புக் துவக்க இருப்பதாகவும், இந்த மெயில் அட்பேஸ்புக்.காம் என்று முடியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கிற்கு, சர்வதேச அளவில் 500 மில்லியன் பயனாளர்கள் இருப்பதாகவும், மற்ற முன்னணி நிறுவன்ஙகளான கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் நிறுவனங்களை முறியடிக்கும் பொருட்டு இந்த சேவை‌ துவக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டிராக்கிங் நிறுவனமான காம்ஸ்கோர் நிறுவனம், சமீபத்தில் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, கடந்த செப்டமபர் மாத நிலவரப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹாட்மெயிலுக்கு 361.7 மில்லியன் பயனாளர்களும், யாகூமெயிலுக்கு 273.1 மில்லியன் பயனாளர்களுகும், கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு 193.3 மில்லியன் பயனாளர்கள் இருப்பத‌ாகவும் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் பார்த்தால், பேஸ்புக்கிற்கு 500 மில்லியன் பயனாளர்கள் இருப்பதால், யாகூ, கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை எளிதில் பின்னுக்குத் தள்ளலாம் என்ற முடிவில் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக்கிரஞ்சில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : பேஸ்புக் நிறுவனம், இந்த திட்டத்தை ரகசியமாக வைத்திருந்ததாகவும், இந்த திட்டத்தி்ற்கு "புராஜெக்‌ட் டைட்டன்" என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், சுருங்கக் கூறினால், "ஜிமெயில் கில்லர்" என்று பொருள் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-மெயில் சேவையை துவக்குவதற்கான பணிகள் ஆரம்பக்கட்ட நிலையிலேயே உள்ளதாகவும், விரைவில் இ-மெயில் சேவையை துவங்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, November 12, 2010

2012 ல் விண்டோஸ் 8 தொகுப்பு

விண்டோஸ் 8 இயங்குதளமானது (Operating System) 2012 இல் வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.

இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனது ' டச்சு' மொழி வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.


இறுதியாக மைக்ரோசொப்ட் தனது விண்டோஸ் 7 இயங்குதளத்தினை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டது.

விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே விண்டோஸ் 7 ஆகும்.

அண்மையில் அப்பிள் தனது மெக். ஒ.எஸ் எக்ஸ் 10.7 லயன் (Mac OS X 10.7 Lion) இயங்குதளத்தினை வெளியிட்டிருந்தது.

மேலும் இதில் அப்பிளின் அப் ஸ்டோர் (App Store) போன்ற வசதியையும் அப்பிள் உள்ளடக்கியிருந்தது.

மைக்ரோசொப்டும் இது போன்ற வசதியினை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விண்டோஸ் 7 ஐப் போல விண்டோஸ் 8 உம் பல புதிய மாற்றங்களை உள்ளடக்கியிருக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தற்போது மைக்ரோசொப்ட், விண்டோஸ் போன் 7(Windows 7 mobile) மற்றும் எக்ஸ் பொக்ஸ் 360 இக்கான கைநெக்ட்(kinect) மோசன் சிஸ்டம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சூரிய கிரகணம் - கிரகணநாளில் பிறந்த புதிய கண்டுபிடிப்புகள்....

Photo courtesy NBC news வான்பரப்பில், சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியதாக உள்ளது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே...