Monday, January 17, 2011

ஜல்லிக்கட்டு : காளைகளை அடக்கும் காளையர்கள்

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் , அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நடைபெற்ற தமிழர்களின் வீரவிளையாட்டான "ஜல்லிக்கட்டு" விளையாட்டின் போது துள்ளி எழுந்த காளைகளை அடக்க முயலும் கட்டிளங்காளையர்கள்............







Tuesday, January 11, 2011

2020ல் இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் : ஐசிஏஆர்

 2020ல் இந்தியா வல்லரசு ஆகும் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கூறியதை, நாம் நனவாக்கும் முயற்சியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், 2020ல் இந்தியாவில் உணவுப்பற்றாக்குறை ஏற்படும் என்று இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சுரல் ரிசர்ச் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில், இந்திய - சர்வ‌தேச பயிர் மாநாடு நடைபெற்றது. இதில் தலைமையுரையாற்றிய இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சுரல் ரிசர்ச் மையத்தின் துணை உதவி இயக்குனர் சுவபன் கே தத்தா கூறியதாவது : நாட்டில், உணவு பாதுகாப்பு முறைகள் மற்றும் உணவு உற்பத்தியில் பெரும் மாற்றங்களை ‌கொண்டு வர வேண்டும், நவீன தொழில்நுட்பங்களை அதில் புகுத்த வேண்டும். அவ்வாறு இல்லையெனில், இந்தியா 2020ம் ஆண்டில் வல்லரசு ஆவதற்குப் பதிலாக, உணவிற்காக, பிற நாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்படும் என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது, 2009ல், நம்நாட்டில் 100 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, 2020ல் இதன் தேவை 130 மில்லியன் டன்னாக அதிகரிக்கும், அதேபோல், கோதுமையின் ‌தேவையும் 110 மில்லியன் டன் என்ற அளவைத் தொடும் என்றும், 2009ம் ஆண்டில் 80 மில்லியன் டன் கோதுமை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பருப்புகள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் தேவையும், 140 மற்றும் 243 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். ஐசிஏஆர் கணித்துள்ளபடி, வரும் ஆண்டுகளில் வறட்சி, அசாதாரணமான சூழ்நிலை காரணமாக அரிசி உற்பத்தி 15 முதல் 42 சதவீதம் வரை சரியும். கோதுமை உற்பத்தி 34 சதவீதம் வரை குறையும். இதனை எதிர்‌கொள்ளும் பொருட்டு, நாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே கையாள வேண்டும், பார்லிமென்டில் அடுத்த கூட்டத்தொடரில், உணவு உற்பத்தி குறித்த கொள்கை வகுக்கப்பட்டு அதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Friday, January 7, 2011

உலகிலேயே குறைந்த வயதில் விமான கேப்டனான பெண்

உலகிலேயே மிக குறைந்த வயதில் விமான கேப்டனாகி, நெல்லை மாவட்டம் காவல்கிணற்றை சேர்ந்த பவிகா பாரதி சாதனை புரிந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் காவல்கிணற்றை சேர்ந்தவர் பாரதி. நாடார் சமுதாயத்தை சேர்ந்த இவர், மும்பையில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் ஜூடித். இவர்களுக்கு பவிகா பாரதி என்ற ஒரே மகள் இருக்கிறார். பவிகாவுக்கு 18 வயதாகும்போது விமான ஓட்டியாக பயிற்சி பெற விரும்பினார். எனவே, அவரது தாயார் ஜூடித் விமானம் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கும் பிளையிங் கிளப்புக்கு அழைத்து சென்றார்.¬ அப்போது 39 வயதாகி இருந்த ஜூடித் அங்கு அளிக்கப்படும் பயிற்சிகளைப்பார்த்து, நானும் பயிற்சி பெற சேரலாமா? என்று கேட்டார். பிளையிங் கிளப் அதிகாரிகள் நீங்களும் சேரலாம் என்று கூறினர். தொடர்ந்து தாயும், மகளும் விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்ந்து ஒரே நேரத்தில் 2007&ம் ஆண்டு மே மாதம் கமர்ஷியல் பைலட் லைசென்சை பெற்றனர். அப்போது தொடர்ந்து இருவரும் கோபைலட்டாக கிங்பிஷர் விமான நிறுவனத்தில் பணியில் சேர்ந்தனர்.
விமான கேப்டன் : பவிகா பாரதி சென்னை&தூத்துக்குடி ரூட்டில் கோபைலட்டாக பணியாற்றினார். அவருடைய பணியாற்றல், பல கேப்டன்களை வெகுவாக கவர்ந்தது. 2,400 மணி நேரம் விமானத்தில் பறந்து, முதுநிலை பைலட் லைசென்சை (அட்வான்ஸ்டு ட்ரெயினிங் பைலட் லைசன்சு) பெற்றார். தற்போது அவர் தன்னுடைய 21 வயதில் விமான கேப்டனாக தலைமை பொறுப்பில் விமானம் ஓட்டுகிறார்.
முதன் முதலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பவிகா பாரதி பெங்களூர்&ஐதராபாத்&பெங்களூர் ரூட்டில், கிங்பிஷர் விமான நிறுவனத்தில் கேப்டனாக விமானத்தை ஓட்டி, உலகிலேயே குறைந்த வயது விமான கேப்டன் என்ற பெருமையை தமிழ்நாட்டுக்கு தேடித்தந்துள்ளார்.

பைலட்டுகள் வாழ்த்து : அவருடைய இந்த சாதனையை பார்த்து, விமான பைலட்டுகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். 18 வயதில் கோபைலட்டாக சேர்ந்து, 21 வயதில் பைலட்டாக விமானத்தை ஓட்டி வரும் பவிகாவின் மற்றொரு ஆசை, தான் கேப்டனாகவும், தனது தாயார் ஜூடித் கோபைலட்டாகவும் பணியாற்றி, ஒரு விமானத்தை ஓட்டி சாதனை புரியவேண்டும் என்பதுதான். பவிகா பாரதிக்கு விமானத்தை ஓட்டுவதோடு மட்டும் ஆசை நின்றுவிடவில்லை. நன்றாக ஓவியம் வரைவார், கர்நாடக இசையில் பாடுவார், பியானோ இசை கருவியை மீட்டுவதிலும் வல்லவர்.
லண்டனில் உள்ள டிரினிடி இசை கல்லூரி நடத்திய தேர்வில் சமீபத்தில் தேர்வு பெற்றுள்ளார். அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பையும் படித்து வருகிறார்.

Thursday, January 6, 2011

சிறந்த நகைச்சுவை

ஆற்றோரத்தில் ஜெபம் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. ஒரு குடிகாரனும் ஜெபத்தில் கலந்துக்கொள்ள நேறிடுகிறது வருகிறான்.குடிகாரன் பாதிரியாரின் அருகில் நிற்க நேரிடுகிறது.குடிகாரனை கவனித்த பாதிரியார்,”நீ இயேசுவை பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்கிறார்.

அதற்கு குடிகாரனும் “ஆம் பார்க்க விரும்புகிறேன்” என்கிறான்.

பாதிரியார் குடிகாரனின் தலையினை பிடித்து ஆற்றுக்குள் அழுத்திவிட்டு பிறகு வெளியே இழுத்து "இயேசுவை பார்த்தாயா?" என்கிறார்.

குடிகாரன் “இல்லை இயேசுவை பார்க்கல”

மறுபடியும் நீருக்குள் குடிகாரனை முன்பை விட கொஞ்சம் அதிக நேரம் அழுத்திவிட்டு

இப்போது “இயேசுவை பார்த்தாயா” என்கிறார் பாதிரியார்.

குடிகாரன் “இப்போதும் பார்க்கவில்லை”

இப்போது குறைந்தபட்சமாக 30 நொடிகள் நீருக்குள் அழுத்திவிட்டு வேளியே எழுந்ததும்

“இப்போது இயேசுவை பார்த்தாயா?” என்கிறார் பாதிரியார்.

குடிகாரன் “நிச்சயமாக சொல்லுங்க இயேசு இங்கே தான் தொலைந்தாரா?”

(குறிப்பு : சிறந்த நகைச்சுவைகளில் ஒன்று என்று ஆங்கில தளத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது)

சூரிய கிரகணம் - கிரகணநாளில் பிறந்த புதிய கண்டுபிடிப்புகள்....

Photo courtesy NBC news வான்பரப்பில், சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியதாக உள்ளது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே...