உலகிலேயே மிக குறைந்த வயதில் விமான கேப்டனாகி, நெல்லை மாவட்டம் காவல்கிணற்றை சேர்ந்த பவிகா பாரதி சாதனை புரிந்துள்ளார்.
நெல்லை மாவட்டம் காவல்கிணற்றை சேர்ந்தவர் பாரதி. நாடார் சமுதாயத்தை சேர்ந்த இவர், மும்பையில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெயர் ஜூடித். இவர்களுக்கு பவிகா பாரதி என்ற ஒரே மகள் இருக்கிறார். பவிகாவுக்கு 18 வயதாகும்போது விமான ஓட்டியாக பயிற்சி பெற விரும்பினார். எனவே, அவரது தாயார் ஜூடித் விமானம் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கும் பிளையிங் கிளப்புக்கு அழைத்து சென்றார்.¬ அப்போது 39 வயதாகி இருந்த ஜூடித் அங்கு அளிக்கப்படும் பயிற்சிகளைப்பார்த்து, நானும் பயிற்சி பெற சேரலாமா? என்று கேட்டார். பிளையிங் கிளப் அதிகாரிகள் நீங்களும் சேரலாம் என்று கூறினர். தொடர்ந்து தாயும், மகளும் விமானம் ஓட்டும் பயிற்சியில் சேர்ந்து ஒரே நேரத்தில் 2007&ம் ஆண்டு மே மாதம் கமர்ஷியல் பைலட் லைசென்சை பெற்றனர். அப்போது தொடர்ந்து இருவரும் கோபைலட்டாக கிங்பிஷர் விமான நிறுவனத்தில் பணியில் சேர்ந்தனர்.
விமான கேப்டன் : பவிகா பாரதி சென்னை&தூத்துக்குடி ரூட்டில் கோபைலட்டாக பணியாற்றினார். அவருடைய பணியாற்றல், பல கேப்டன்களை வெகுவாக கவர்ந்தது. 2,400 மணி நேரம் விமானத்தில் பறந்து, முதுநிலை பைலட் லைசென்சை (அட்வான்ஸ்டு ட்ரெயினிங் பைலட் லைசன்சு) பெற்றார். தற்போது அவர் தன்னுடைய 21 வயதில் விமான கேப்டனாக தலைமை பொறுப்பில் விமானம் ஓட்டுகிறார்.
முதன் முதலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பவிகா பாரதி பெங்களூர்&ஐதராபாத்&பெங்களூர் ரூட்டில், கிங்பிஷர் விமான நிறுவனத்தில் கேப்டனாக விமானத்தை ஓட்டி, உலகிலேயே குறைந்த வயது விமான கேப்டன் என்ற பெருமையை தமிழ்நாட்டுக்கு தேடித்தந்துள்ளார்.
பைலட்டுகள் வாழ்த்து : அவருடைய இந்த சாதனையை பார்த்து, விமான பைலட்டுகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். 18 வயதில் கோபைலட்டாக சேர்ந்து, 21 வயதில் பைலட்டாக விமானத்தை ஓட்டி வரும் பவிகாவின் மற்றொரு ஆசை, தான் கேப்டனாகவும், தனது தாயார் ஜூடித் கோபைலட்டாகவும் பணியாற்றி, ஒரு விமானத்தை ஓட்டி சாதனை புரியவேண்டும் என்பதுதான். பவிகா பாரதிக்கு விமானத்தை ஓட்டுவதோடு மட்டும் ஆசை நின்றுவிடவில்லை. நன்றாக ஓவியம் வரைவார், கர்நாடக இசையில் பாடுவார், பியானோ இசை கருவியை மீட்டுவதிலும் வல்லவர்.
லண்டனில் உள்ள டிரினிடி இசை கல்லூரி நடத்திய தேர்வில் சமீபத்தில் தேர்வு பெற்றுள்ளார். அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பையும் படித்து வருகிறார்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வைகை நதி ஓடும் மாநகரத்தில் வாழும் எளிமையானவன். தான் அறிந்த தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்பவன்
Subscribe to:
Post Comments (Atom)
இதை நான் இன்னைக்கு கண்டுபுடிச்சது
தென்மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்களின் குரல் கொஞ்சம் கரடு முரடாக ரொம்ப Deep Base குரலாக இருக்கிறது...குறிப்பாக மதுரை, தேனி, திருநெல...
-
காதலித்து மணந்தவளை இறந்து விட்டாள் என நினைத்து சந்தர்ப்பவசத்தால், வேறு ஒரு பெண்ணை மணப்பார். இறந்தவளாக கருதப்பட்டவர் பார்வை இழந்த நிலையில் ...
-
சொந்தமாக கார் வாங்குவது பெரிய விஷயமல்ல. அதற்கு இன்சூரன்ஸ் எடுத்து முறையாக பிரிமியம் தொகை கட்டுவது தான் பெரிய விஷயம். அந்த வகையில் கார்களுக்க...
-
ஆற்றோரத்தில் ஜெபம் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. ஒரு குடிகாரனும் ஜெபத்தில் கலந்துக்கொள்ள நேறிடுகிறது வருகிறான்.குடிகாரன் பாதிரியாரின் அருகில...

No comments:
Post a Comment