Wednesday, October 17, 2012


சும்மா பறந்து பறந்து ஆடியோ ரிலீஸ் : அசத்தும் உலகநாயகன்


விஸ்வரூபம் டிரெய்லரையே 100 நாட்களுக்கு மேல் ஓட்டி சாதனை படைத்துள்ள உலக நாயகன்  கமல்ஹாசன், படத்தின் ஆடியோ ரிலீசை, 3 நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக, அவர் சார்ட்டர்ட் ரக விமானம் ஒன்றையும் வாடகைக்கு எடுக்கிறார்.

இதுகுறித்து, கமல்ஹாசனின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, விஸ்வரூபம் திரைப்படத்தை  உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் கதை திரைக்கதை , வசனம் எழுதி மற்றும் இயக்கியுள்ள விஸ்வரூபம் திரைப்படம், சர்வதேச தரத்தில் வந்துள்ளது. இதன் ஆடியோ ரீலிஸ், கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது. மாநிலத்தின் முன்னணி நகரங்களான மதுரை, கோவை மற்றும் சென்னை என 3 இடங்களில் ஆடியோ ரீலிஸ் நடைபெறுகிறது. இதற்காக, கமல், சார்ட்டர்ட் விமானம் ஒன்றை வாடகைக்கு எடுக்க உள்ளதாகவும், ஆடியோ ரீலிசில் பங்கேற்க உள்ள சிறப்பு அழைப்பாளர்கள் குறித்து தற்போது பணிகள் நடைபெற்று வருவதாக  அவர் கூறினார்.

விஸ்வரூபம் படத்தின் ஆடியோ ரீலிஸ் அன்றே, படம் வெளியாகும் தேதியை கமல் அறிவிப்பார்   என்று அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Sunday, February 12, 2012

உலகத்திலேயே மகிழ்ச்சியானவர்கள் பட்டியலில் இந்தியர்கள் : கருத்துகணிப்பு

நியூயார்க் : இயற்கை பேரிடர்கள், ஊழல் விவகாரங்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின்வெட்டு பிரச்னை என பல்வேறு பிரச்னைகளால் மக்கள் அவதிப்பட்டு இருந்தபோதிலும், உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியானவர்கள் பட்டியலில் இந்தியர்களும் இடம்பெற்றுள்ளது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

2007ம் ஆண்டு துவங்கி, இதுவரை 24 நாடுகளில் சுமார் 18 ஆயிரம் மேற்பட்டவர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பின் படி இம்முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கணிப்பு நடத்திய நிறுவனமான இப்சோஸ் குளோபல் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் ஜான் ரைட் கூறியுள்ளார்.

இதன்படி, உலகிலேயே மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இந்தோனேஷியாவும், 2ம் இடத்தில் இந்தியாவும், 3ம் இடத்தில் மெக்ஸிகோவும் உள்ளது. முறையே 4ம் மற்றும் 5ம் இடத்தில் பிரேசில் மற்றும் துருக்கி நாடுகள் உள்ளன.

மகிழ்ச்சி குறைவாக உள்ள மக்கள் உள்ள நாடுகள் பட்டியலில், ஹங்கேரி, தென்கொரியா, ரஷ்யா, ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் உள்ளதாக ஜான் ரைட் கூறினார்.

கேள்விக்கு பதிலளித்தால் மட்டுமே பிரான்ஸ் செல்லலாம்

லண்டன் : பிரான்ஸ் நாட்டில் குடியேற விரும்புபவர்களா நீங்கள், அப்படியென்றால் மாறுபட்ட சோதனைக்கு தயாராக வேண்டும் என்று பிரான்ஸ் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டெய்லி ஸ்டார் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாரீசில் உள்ள ஈபிள் கோபுரம் தொலைக்காட்சி கோபுரமா? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளித்தால் மட்டுமே பிரான்ஸ் குடியுரிமையை பெற முடியும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்விகள் கடினமாக இருக்காது என்று எதிர்பார்ப்பதாக, பிரான்ஸ் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

Monday, February 6, 2012

மூங்கிலினாலான ஸ்மார்ட்போன் : பிரிட்டிஷ் மாணவர் சாதனை

  
லண்டன் : உலகிலேயே முதல்முறையாக, ஸ்மார்ட்போனை, பிரிட்டிஷ் பல்கலைக்கழக மாணவர் மூங்கிலில் உருவாக்கி உள்ளார். இந்த ஸ்மார்ட்போனை, இந்தாண்டின் இறுதிக்குள் ஐரோப்பாவில் விற்பனைக்கு கொண்டுவர அம்மாணவர் திட்டமிட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனை பூர்வீகமாக கொண்ட கெய்ரோன்-ஸ்காட் வுட்ஹவுஸ், மிடில்செக்ஸ் பல்கலைக்கத்தில் படித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, சிறுவயதில் இருந்தே, தனக்கு மூங்கிலின் மீது தீராத பற்று இருந்தது. எனது ஓய்வுநேரங்களில், கிடைக்கும் மூங்கிலினை சீவி ஏதாவது ஒருபொருள் செய்து கொண்டிருப்பேன். அந்த வகையில் உருவானது தான் இந்த ஸ்மார்ட்போன். மற்ற மொபைல்போன்களைப் போலவே, இதிலும் கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளது. ஆட்ஜிரோ என்ற தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, சாதாரணமாக போட்டோ எடுக்கும்போது, ஏற்படும் குறைபாடுகள் இதில் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூங்கில், மற்ற பொருட்களை ஒப்பிடும்போது வலிமையானதும், மற்றும் உறுதியானதும் ஆகும். இந்த மூங்கிலில், ஸ்மார்ட்போன் செய்வேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், தற்போது தான் உருவாக்கியுள்ள மூங்கில் ஸ்மார்ட்போன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தாண்டின் இறுதிக்குள் இந்த மூங்கில் ஸ்மார்ட்போனை வர்த்தகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

சூரிய கிரகணம் - கிரகணநாளில் பிறந்த புதிய கண்டுபிடிப்புகள்....

Photo courtesy NBC news வான்பரப்பில், சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியதாக உள்ளது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே...