Sunday, May 18, 2014

இங்கிலாந்து உள்ளாட்சி தேர்தலில் தமிழர் போட்டி



பிரிட்டனின் ஈஸ்ட்ஹாம் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில், துரைமுருகன் கண்ணன் எனும் தமிழர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் உள்ளாட்சி தேர்தல், வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. மே முதல் வாரத்தில் நடைபெறுவதாக இந்த தேர்தல், வரும் 22ம் தேதி, ஐரோப்பிய பார்லிமென்ட் தேர்தலோடு சேர்த்து நடைபெற உள்ளது.

லண்டன் பகுதியில் அமைந்துள்ள 32 தன்னாட்சி பெற்ற நகரங்கள், மொத்தமுள்ள 36 மெட்ரோபாலிடன் தன்னாட்சி பெற்ற நகரங்கள், 74 இரண்டாம் தர மாவட்ட நிர்வாகங்கள், 20 யூனிட்டரி நிர்வாகங்கள் மற்றும் மற்றும் பல்வேறு பகுதி மேயர்களை தேர்ந்தெடுக்கும் வண்ணம் இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில், பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி, எட் மிலிபாண்ட் தலைமையிலான தொழிலாளர் கட்சி மற்றும் நிக் கிளெக் தலைமையிலான லிபெரல் டெமோக்ரடிக் கட்சி கள் சார்பில் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

பிரிட்டன் தலைநகர் லண்டனை அடுத்த ஈஸ்ட்ஹாம் வடக்கு பகுதி உள்ளாட்சி தேர்தலில், துரை முருகன் என்ற தமிழர், ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். பிரிட்டன் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் நபர் துரை முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கையில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பை சிவகங்கையிலும், பொறியியல் படிப்பை மதுரையிலும், எம்.பி.ஏ. படிப்பை லண்டனிலும் முடித்துள்ளார். துவக்கத்தில் ஹோட்டல் துறையில் ஈடுபட்டு வந்த அவர், தற்போது அவர் அங்கு முன்னணி தொழிலதிபராக உள்ளார். 

சூரிய கிரகணம் - கிரகணநாளில் பிறந்த புதிய கண்டுபிடிப்புகள்....

Photo courtesy NBC news வான்பரப்பில், சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியதாக உள்ளது. இதன் காரணமாக, சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே...