Wednesday, November 26, 2025

இதை நான் இன்னைக்கு கண்டுபுடிச்சது

தென்மாவட்டத்தைச் சேர்ந்த  பெரும்பாலான ஆண்களின் குரல் கொஞ்சம் கரடு முரடாக ரொம்ப Deep Base குரலாக இருக்கிறது...குறிப்பாக மதுரை,  தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 

கொங்கு மண்டலத்தில் உள்ள ஆண்களின் குரல் மென்மையாக மயிலிறகால் வருடுவது போல் இருக்கிறது.. குறிப்பாக கோயம்புத்தூர் (கிராமங்கள்)திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில்...

இதற்கு காரணமாக நான் நினைப்பது தென் மாவட்டத்தில் வல்லின எழுத்துக்களான க ச ட த ப ற எழுத்துக்களை அதிகம் பயன்படுத்தி மிகவும் அழுத்திக் பேசுகிறார்கள்.


கொங்கு மண்டலத்தில் ங ஞ ண ம ன என்ற மெல்லின எழுத்துக்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

எடுத்துக்காட்டாக சொல் என்ற சொல்லை 

ச்சொல்லு என்று தென் மாவட்ட மக்களும்

ஸொல்லுங் என்று கொங்கு மண்டல மக்களும் பயன்படுத்துகிறார்கள்...

"ஏல ச்சாப்ட்டியா" என்று தென் மாவட்ட மக்களும் 

"ஸாப்ட் போட் வாங்" என்று கொங்கு மண்டல மக்களும் பயன்படுத்துகிறார்கள்..

கொங்கு மண்டலத்தில் வல்லின எழுத்துக்களையே மிகவும் மென்மையாக பேசுகிறார்கள்...

ஆங்கிலத்தில் இந்த சொல்லை கவனியுங்கள் 

"Kkonde Ppuduven" மதுரையிலும்

"Gonnu boduvanug" என்று கோயம்புத்தூரிலும் பேசுகிறார்கள்..

அதனால் தான் காலப் போக்கில் பரிணாம வளர்ச்சியில் குரலில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து..

இதை நான் இன்னைக்கு கண்டுபுடிச்சது🙏




No comments:

Post a Comment

இதை நான் இன்னைக்கு கண்டுபுடிச்சது

தென்மாவட்டத்தைச் சேர்ந்த  பெரும்பாலான ஆண்களின் குரல் கொஞ்சம் கரடு முரடாக ரொம்ப Deep Base குரலாக இருக்கிறது...குறிப்பாக மதுரை,  தேனி, திருநெல...