படித்து விட்டு வேலைக்காக பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் நண்பர் ஒருவர், "ஆப்ஜக்டிவ் டைப்' தேர்வுகளில் (இவ்வகைத் தேர்வுகளில், ஒரு கேள்வி கேட்டு, அதற்கு நான்கு பதில்களைக் கேள்வித் தாளில் கொடுத்து இருப்பர்... அந்த நான்கில் எது சரியான விடை என்பதை, "டிக்' செய்தால் போதும்!) "புதுவிதமாக, காப்பி நடக்கிறது... அதை நீங்கள் நேரில் பார்த்தால், "இன்ட்ரஸ்டிங்' ஆக இருக்கும்... தேர்வு நடக்கும் நேரத்தில் சொல்கிறேன்... வருவீர்களா?' எனக் கேட்டார்...
"ஓ, வருகிறேன்... ஆனால், தேர்வு நேரங்களில் வெளியாட்களை உள்ளே விட மாட்டார்களே...' என்றேன்.
"கவலையை விடுங்கள்... நான் அழைத்துச் சென்று, வசமான இடத்தில் உங்களை உட்கார வைக்கிறேன்... அந்த இடத்தில் இருந்தே தேர்வு அறையின் உள்ளே நடப்பதை நீங்கள் தெளிவாகக் காணலாம்...' என்றார்.
அந்த நாளும் சமீபத்தில் வந்தது. நண்பர், தன் தேர்வு எழுதும் கல்லூரிக்கு அழைத்துச் சென்று, அவர் கூறியபடியே பாதுகாப்பான இடத்தில் அமர வைத்தார்.
மணி அடித்தது... அதுவரை பரபரப்பாக இருந்த கல்லூரி வளாகம் அமைதியானது. தேர்வு எழுத வந்தவர்கள் அவரவர் இருக்கையில் அமர, பரீட்சை பேப்பர் வினியோகம் ஆரம்பமானது.
எல்லாம் வழக்கப்படி நடக்க, ஒரு விஷயம் மட்டும் வினோதமாகப் பட்டது.
அது —
தேர்வு எழுத வந்தவர்களில் பலரும் நான்கு பேனாக்கள், பென்சில்கள், ரப்பர்கள் என மேசை மீதும், தத்தம் சட்டைப் பைகளிலும் வைத்து இருந்தனர். இரண்டு பேனாவும், ஒரு பென்சிலும், ஒரு ரப்பருமே அதிகப்படி எனும் போது, இத்தனை எதற்கு என எண்ணிக் கொண்டிருக்கும் போதே, தேர்வு எழுத வந்தவர்களின் சேஷ்டைகள் ஆரம்பமானது.
ஒரு பேனாவைத் தூக்கிக் காட்டுவதும், இரண்டு பேனாக்களைத் தூக்கிக் பிடிப்பதும், பேனா, பென்சில், ரப்பர் என எடுத்துக் காட்டுவதுமாக இருந்தனர்.
வாசகர் சொன்ன, "டுபாக்கூர்' வேலை இது தான் என்பது தெரிந்தாலும், விஷயம் முழுமையாகப் புரியவில்லை... தேர்வு முடித்து வந்த அந்த வாசகர் பின்னர் விளக்கினார்:
"நம்ம மக்கள் எந்த அளவுக்கு புத்திசாலிகள் என்பதற்கு ஓர் உதாரணத்தைப் பார்த்தீர்களா... சரியான விடை தெரிந்தவர்களிடமிருந்து விடைகளைப் பெற, மற்றவர்கள் சங்கேத அடையாளங்களை பயன்படுத்துகின்றனர். இதன்படி தலையைச் சொறிந்தால், முதல் விடை சரியானது. நெற்றியைத் தொட்டால், இரண்டாவது விடை சரியானது. அதே போல கண்ணைத் தொட்டால், மூன்றாவது விடையும், மூக்கைத் தொட்டால், நான்காவது விடையும் சரியானவை.
"சரி... கேள்விகள் நூறு வரை இருக்குமே... இதை எப்படி சொல்கின்றனர்...' எனக் கேட்டேன்.
"பேனா மூடி காட்டினால் ஒன்று. பேனாவைக் காட்டினால் இரண்டு, பென்சில் ஐந்து, ரப்பர் பத்து என மதிப்பு கொடுத்துள்ளனர்... கர்சிப் ஜீரோ. விடை கேட்பவர்கள் பேனா, பென்சில், ரப்பர் போன்றவற்றில் தலா மூன்று நான்கு வைத்திருப்பர். உதாரணமாக, இருபத்தாறாவது கேள்விக்கு விடை கேட்க வேண்டும் என்றால், ஒரு பேனா அதை அடுத்து ஒரு பென்சில், அதன் மேல் ஒரு பேனா மூடி என வைத்து விட்டு தேர்வு எழுத வந்திருக்கும் புத்திசாலியான நண்பனை ஒரு பார்வை பார்ப்பர். அவர் தலையையோ, மூக்கையோ, சொறிந்து சரியான விடையைச் சொல்வார். அதே போல், ஐம்பதாவது கேள்விக்கு விடை தேவை என்றால், பென்சிலை வைத்து அதை அடுத்து கர்சிப்பை வைப்பர்.
"இந்த சங்கேத அடையாளத்தை போட்டித் தேர்வு எழுத வருபவர்களும், கல்லூரி மாணவர்களும் பரவலாகப் பயன்படுத்துகின்றனர்!' என்றார் வாசகர்.
— இப்படி பரீட்சை பாஸ் பண்ணிட்டு வர்றவங்ககிட்ட இருந்து என்ன, "குவாலிட்டி' எதிர்பார்க்க முடியும்?
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வைகை நதி ஓடும் மாநகரத்தில் வாழும் எளிமையானவன். தான் அறிந்த தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்பவன்
Subscribe to:
Post Comments (Atom)
தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?
இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்" எனும் வட வேத ...

-
காதலித்து மணந்தவளை இறந்து விட்டாள் என நினைத்து சந்தர்ப்பவசத்தால், வேறு ஒரு பெண்ணை மணப்பார். இறந்தவளாக கருதப்பட்டவர் பார்வை இழந்த நிலையில் ...
-
விண்டோஸ் 8 இயங்குதளமானது (Operating System) 2012 இல் வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது. இது தொடர்பான செய்தியை மைக்ரோசொப்ட் தனத...
-
ஒன்று இரண்டு படங்களில் தலை காட்டிய ஹீரோக்கள் கூட இன்று விளம்பரப் படவுலகில் சிறந்த வியாபாரிகளாக வலம் வந்துகொண்டிருக்க, ஐம்பது வருடத்தை கடந்து...
No comments:
Post a Comment