Friday, December 10, 2010

ஊழலில் இந்தியாவிற்கு 9வது இடம்

புதுடில்லி : காமன்வெல்த் போட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு என நாடே ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கொண்டாடப்படுவது அதைவிட கேலிக்குரியது. சர்வதேச அளவில் இந்தியா ஊழலில் 9வது இடத்தைப் பிடித்திருப்பது மக்களுக்கு சற்று ஆதரவளி்க்கும் செய்தியாக உள்ளது. சர்வதேச அளவில், 91 ஆயிரம் பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாகவும், தேசிய அளவில் ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், இந்தியாவில் 54 சதவீதம் லஞ்சம் தருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் (அடைப்புக்குறிக்குள் சதவீதம்) முதலிடத்தில் லைபீரியா (89%), அதனைத்தொடர்ந்து வரும் இடங்களில் உகாண்டா (86%), கம்போடியா (84%), சியரோ லியோன் (71%), நைஜீரியா (63%),  ஆப்கானி்ஸ்தான் (61%), போர் பதற்றமிக்க ஈராக் மற்றும் செனகல் (56%), இதற்கடுத்து இந்தியா (54%) உள்ளது.  கல்வி, நீதித்துறை, மருத்துவ சேவைகள், காவல்துறை, பத்திரப்பதிவு மற்றும் அனுமதி சேவைகள், வசதிகள், வரி, நிதி மற்றும் சுங்க துறைகளை கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் கடந்த 3 ஆண்டுகளில் லஞ்சம் பெறுவது பெருமளவில் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் இது உச்சகட்ட அளவை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், இதில் இந்தியாவின் பங்கு 25 சதவீதமாகவும், ஆசிய பசிபிக் நாடுகளின் அடிப்படையில் 11 சதவீதமாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் பெறுவதில் அரசியல்வாதிகளை மிஞ்ச யாருமில்லை என்ற கருத்து இந்திய மக்களிடையே மேலோங்கி இருப்பதாகவும், 5 துறைகளை மட்டும் கணக்கில் கொண்டதில், அரசியல்வாதிகள் 5க்கு 4.2 சதவீதமும், காவல் துறை (4.1 சதவீதம்), பார்லிமெண்ட் மற்றும் சட்டத்துறை (4 சதவீதம்), அரசு அதிகாரிகள் (3.5 சதவீதம்), தனியார் துறை, என்ஜிஓ மற்றும் நீதித்துறை (3.1 சதவீதம்), மீடியா துறை (3 சதவீதம்) , மத சார்பிலான அமைப்புகள் (2.9 சதவீதம்), ராணுவம் (2.8 சதவீதம்) என்ற அளவில், சர்வதேச அளவில் லஞ்சம்/ஊழல் நீக்கமற நிறைந்திருப்பதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?

இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்"  எனும் வட வேத ...