Wednesday, December 1, 2010

எல்லாப் புகழும் தமிழகத்துக்கே!!!!

மற்ற மாநிலங்களை விட, தொழில் துறையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் தான், மின் கட்டணம், பஸ் கட்டணம் குறைவு. மத்திய அரசுக்கு நிகரான சம்பளத்தை உயர்த்தும் முதல் மாநிலம் தமிழகம். மற்ற ஊழல்களை விட, அதாவது மாட்டுத் தீவன ஊழல், 1,000 கோடி ரூபாய் (பீகார்), நில ஊழல், 400 கோடி (மகாராஷ்டிரா), மருத்துவ உபகரண ஊழல், 500 கோடி, போபர்ஸ் ஊழல், 65 கோடி, சர்க்கரை ஊழல், 650 கோடி ரூபாயை விட, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவால், தமிழகம் ஊழலிலும் முதலிடம் பிடித்துள்ளது. சுதந்திரம் பெற்ற பின், தமிழகத்தில் காங்கிரசை ஓரம் கட்டிவிட்டு, கழக ஆட்சி வந்தது. அன்று முதல் முதலாக, விஞ்ஞானப்பூர்வ ஊழலை செய்தது
ம், "கழகம்' தான். அதிலும், தமிழகம் தான் முதல் இடம். ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த பின்தான், "சொல்லாததையும் செய்வோம்' என்பதின் அர்த்தம் புரிகிறது. இப்போது விலைவாசியெல்லாம் ஏறிவிட்டது. எனவே, வரும் தேர்தலில், ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என்ற கணக்கில் தி.மு.க., தரும். அதையும் நிறைவேற்றி, தமிழகம் முதலிடம் என்பதை தக்க வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

இதை நான் இன்னைக்கு கண்டுபுடிச்சது

தென்மாவட்டத்தைச் சேர்ந்த  பெரும்பாலான ஆண்களின் குரல் கொஞ்சம் கரடு முரடாக ரொம்ப Deep Base குரலாக இருக்கிறது...குறிப்பாக மதுரை,  தேனி, திருநெல...