ஒரு அரசன் தன் மகள் ஒரு எழ்மையானவனை காதலிக்கிறாள். என்று தெரிந்து தன் மகளிடம் பேசிபார்த்தார் ஆனால் மகள் பிடிவாதமாக"அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். இல்லையென்றால் நான் செத்துவிடுவேன்" என்று மிரட்டினால்...'காதல் சாகவும் துணியும்' என்று எண்ணிய அரசன் மகளின் காதலின் உண்மை தன்மையை புரியவைக்கவேண்டும். என எண்ணி தன் மகளிடம் ஒரு நிபந்தனை வைத்தார். அதாவது "உங்களை ஒருநாள் 24 மணிநேரம் முழுவதும் ஒருவர் ஒருவரை பார்க்க முழு நிர்வாணமாக கட்டி வைத்து விடுவோம்...நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அந்த 24 மணி நேரத்தை கடந்தால் உங்கள் காதலுக்கு எனக்கு முழுசம்மதம்" என்கிறார். இதற்கு காதலர்கள் சம்மதிக்கிறார்கள். ஏனென்றால் அந்த காதல் பல கவிதைகள் எழுதி, பாடி, பேசி வாழ்ந்த காதல் அல்லவா.."இது என்ன பெரிய நிபந்தனை நாங்க வெற்றிபெற்று காதலில் ஜெயித்து காட்டுகிறோம்" என்று காதலர்கள் சொல்ல...அரசன் இருவரையும் எதிர் எதிரே கட்டி போடா ஆணையிட்டான். இருவரையும் முழு நிர்வாணமாக ஒரு தூணில் நிற்கவைத்து கட்டி போட்டார்கள். அப்போது இருவருக்கும் கொஞ்சம் வெட்கி தலை குனிந்து ஒருவரை ஒருவர் ஓரக்கண்னால் பார்த்து தம் காதல் வெற்றியடையும் என்று எண்ணி பூரிப்பில் இருந்தார்கள். நேரம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டிருந்தது. இப்போது சில நேரம் சென்றுவிட்டது. காதலனுக்கு சிறுநீர் கழிக்கணும் போல ஒரு உணர்வு ஆனால் அதை அடக்கி கொண்டான். இதேபோன்று அந்த பெண்ணுக்கும்...இருவரும் அடக்க முயற்சி செய்து பார்த்தார்கள். முடியவில்லை வெளியேற்றி விட்டார்கள். இப்போது வெளியேறிவிட்டது. அந்த இடமே நாற்றம் அடிக்க ஆரம்பித்து விட்டது. இருந்தும் முக சுளிப்புடன் சமாளித்தார்கள். ஆனால் காதலனின் வயிறு சாமாளிக்க முடியவில்லை அடுத்த மலகடனை வெளிற்ற நேரம் வந்து விட்டது. இந்த முறை அவன் முயற்சி செய்தும் பலன் இல்லை மலத்தை வெளியேற்றிவிட்டான். நாற்றம் முன்னரை விட இப்போது ரொம்ப அதிகமாகிவிட்டது. என்ன செய்வான்பாவம் அவன் முயற்சிக்கு இயற்கை உபாதைகள் கட்டுப்படவில்லை அந்தவேளையில் கட்டுபாட்டை மீறி கொண்டு வந்துவிட்டது. இப்போது காதலின் முகம் பல கோணல்களை வெளிபடுத்தி விட்டது. "என்னடா நம் காதலன் இப்படி ஒரு நிலையில் இருக்கிறானே..என்ன ஒரு அருவருப்பான நிலை" என்று மனதுக்குள் எண்ணி வெறுப்படைந்தால். இப்போது காதலர்கள் ஒரு முகத்தை ஒருவர் பார்க்கவே அருவருப்பாக இருந்த நிலை முகத்தை திருப்பி கொண்டு தங்களை விடுவித்தால் போதும் என்று எண்ணினார்கள். காதலர்களை விடுவித்தாகிவிட்டது. ஆனால் அவர்களுக்குள் முன்னே இருந்த காதல் இல்லை...
காதல் எனபது உணர்வில் ஏற்படுவதை விட கவர்சியில்தான் ஏற்படுகிறது. அது கவிதையாக, வசனமாக, வீரமாக எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக கொழுந்துவிட்டு எறியும் ஆனால் அவையெல்லாம் உடல் சூட்டின் வேகம் தணியும் வரை...நடைமுறையில் உள்ள காதலர்களை எது சொல்லியும் சமாதானபடுத்த முடியாத சூழ்நிலைதான் இருக்கும். அவர்களே உண்மை தன்மை உணர்ந்துவிட்டால். உணர்ந்து ஒருவேளை கடந்துவிட்டால் உண்மை காதலையும் அவர்கள் உணரலாம்...அதன்பின் அந்த காதலில் 'பிரிவு' என்றுமே இருப்பதில்லை. அதனால் உண்மை காதலை காதலியுங்கள். கவர்ச்சி ஒரு தேவைமட்டும்தான் அது என்றுமே காதலுடன் வருவதில்லை....
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த வைகை நதி ஓடும் மாநகரத்தில் வாழும் எளிமையானவன். தான் அறிந்த தகவல்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்பவன்
Subscribe to:
Post Comments (Atom)
தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?
இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்" எனும் வட வேத ...

-
காதலித்து மணந்தவளை இறந்து விட்டாள் என நினைத்து சந்தர்ப்பவசத்தால், வேறு ஒரு பெண்ணை மணப்பார். இறந்தவளாக கருதப்பட்டவர் பார்வை இழந்த நிலையில் ...
-
அரசியல் தலைவர்கள், கல்விச்சேவை, மனிதநேய சேவை உள்ளிட்ட சேவைகளை செய்யும் சமூக சேவையாளர்கள், சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் கவுரவ டாக்டர் ...
-
UNIVERSAL PASS CUM CERTIFICATE நமது இந்திய அரசு கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸும் போட்டவர்களுக்கு ஒரு பாஸ் கம் சர்டிபிகேட் ஐ ஆன்-லைன் மூலமாகவே...
No comments:
Post a Comment