Monday, December 6, 2010

மக்களின் ஒழுக்கத்தை சோதிக்கும் அரசு!

சென்னையில், யோகிராம் சுரத்குமார் ஜெயந்தி விழா சமீபத்தில் நடந்தது. இதில், "அமுதசுரபி' ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் பேசும் போது, "தனியே நடந்து சென்ற பிரம்மசாரி ஒருவனை, அவ்வழியே, தலையில் கள் பானை, இடுப்பில் குழந்தை, கையில் அரிவாளுடன் சென்ற வேசி இடைமறித்தாள். "உனக்கு மூன்று வாய்ப்பு தருகிறேன். ஒன்று, என் ஆசைக்கு இணங்கு அல்லது இந்த மதுவை குடி, இல்லை இந்த குழந்தையை கொல். ஏதேனும் ஒன்றை செய்தால் தான், உன்னை போக விடுவேன் என்றாள். ஆசைக்கு இணங்கினால், பிரம்மசாரியத்திற்கு இழுக்கு; குழந்தையை கொன்றால் பாவம்; மது குடித்தால் பிரச்னை இல்லை என நினைத்து, அதை குடித்தான். "போதை தலைக்கேறியது; முதலில், ஆசைக்கு தடையாக இருந்த குழந்தையை கொன்றான்; பின் வேசியை அடைந்தான். எந்த பாவமும் செய்யக்கூடாது என நினைத்த பிரம்மசாரியை, அனைத்து பாவங்களையும் செய்ய வைத்தது மது' என்றார். இதை கேட்ட ஒருவர், "மக்களோட ஒழுக்கத்தை சோதிக்க தான், நம்ம அரசே மது விற்பனை செய்யுது போல...' என, முணுமுணுத்தார்.

No comments:

Post a Comment

தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?

இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்"  எனும் வட வேத ...