Friday, December 10, 2010

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் விலையுயர்‌ந்த கோட் சூட்

புதுடில்லி பைனஸ்ட் பேப்ரிக் ஆடைகள் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டோர்மியூலி நிறுவனம், உலகிலேயே விலையுயர்ந்த கோட் சூட்டை அறிமுகம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது..இந்த விலையுயர்ந்த கோட் சூட் "வான்குஷ் 2" என்ற பேப்ரிக்கால் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், அனைவரையும் கவரும் வகையில் இதன் வேலைப்பாடு உள்ளதாகவும் விலையின் அடிப்படையில், இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளதாக இந்த ஆடையை வடிவமைத்த ஆடை கலை நிபுணர் அலெக்சாண்டர் அமோசு தெரிவித்தார். இதுகுறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்த கோட் சூட்டின் விலை ரூ. 51 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 1,13,000 டாலர்கள்). இந்தியாவில் பொருளாதார ஸ்திரத்தன்மை உள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் மார்க்கெட்டிங் துறையை அமைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது இந்திய சந்தையில் களமிறங்கி உள்ள தங்கள் நிறுவனம், அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில களம் காண இருப்பதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

இதை நான் இன்னைக்கு கண்டுபுடிச்சது

தென்மாவட்டத்தைச் சேர்ந்த  பெரும்பாலான ஆண்களின் குரல் கொஞ்சம் கரடு முரடாக ரொம்ப Deep Base குரலாக இருக்கிறது...குறிப்பாக மதுரை,  தேனி, திருநெல...