Wednesday, December 1, 2010

எஸ்டிடிக்கு "கதம் கதம்" : ‌அசத்தியது பிஎஸ்என்எல்

புதுடில்லி: அனைத்து மாநிலங்களுக்குகிடையேயான எஸ்டிடி அழைப்பு கட்டணத்தை பிஎஸ்.என்.எல்., நிறுவனம் குறைத்துள்ளது.இந்த  கட்டணம குறைப்பு  தரைவழி தொலைபேசிக்கு மட்டுமே பொருந்தும். நாடு முழுவதும்பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு  32 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். இவற்றில் 26.2 மில்லியன் மக்கள் லேண்ட்லைன் எனப்படும் தரைவழி தொலைபேசியையும்,5.8 மில்லியன் மக்கள் வில் என்றழைக்கப்படும் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது 2 நிமிடங்கள் வரை பயன்படுத்தும் எஸ்டிடி கட்டணம் 80 பைசா என  வசூலிக்கப்படுகிறது. இனிமேல் இவை 3 நிமிடங்களுக்கு 80 பைசா என வசூலிக்கப்பட உள்ளது. இந்த கட்டணம்  அனைத்து பிசிஓக்களுக்கும் பொருந்தும். முதல் 300 கால்களுக்கு , 3 நிமிட கால அளவிற்கு 80பைசா என்ற கட்டணத்திலும், அதற்குமேல் பயன்படுத்ததும் போது அதிகபட்சமாக ஒரு ரூபாய் இருபது பைசா என்ற விகிதத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம்  எஸ்டிடி கட்டணம்  நீக்கப்பட்டு உள்ளூர் அழைப்பு கட்டணமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?

இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்"  எனும் வட வேத ...