Friday, December 3, 2010

நிகழ்கால பீனிக்சாக உருவெடுத்த விக்கிலீக்ஸ்

ஸ்டாக்ஹோம் : அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் இரகசிய பரிமாற்றங்களை வெளியிட்டுவரும் விக்கிலீக்ஸின் இணையத் தள முகவரி ‘கொல்லப்பட்ட’ 6 மணி நேரத்தில் புதிய இணைய முகவரியுடன் அது உயிர்த்தெழுந்துள்ளது. விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் சர்வர்களை ‘கொல்ல’ முயன்று அது முடியாமல் போன நிலையில், அதன் இணைய முகவரியான wikileaks.org கொல்லப்பட்டது. இப்படியெல்லாம் தாக்குதல் வரலாம் என்பதை எதிர்பார்த்து காத்திருந்ததுபோல், ஒரு புதிய இணைய முகவரியுடன் wikileaks.ch என்ற பெயரில் 6 மணி நேரத்தில் அந்த இணையத் தளம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது. விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாங்காவை சர்வதேச போலீஸ் சிவப்பு அறிக்கை வெளியிட்டுத் தேடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?

இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்"  எனும் வட வேத ...