Friday, December 3, 2010

1994ல் 175...............இன்று 1 லட்சம்!!

புதுடில்லி : அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கன்சல்டிங் சேவை வழங்கும் முன்னணி நிறுவனமான காக்னிஜண்ட், 1 லட்சம் ஊழியர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. இதன்மூலம், இந்த சேவை வழங்கும் மற்ற ஜாம்பவான் நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் மற்றும் விப்‌ரோ நிறுவனங்களுடன் கைகோர்க்கும் நி‌லை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, காக்னிஜண்ட் நிறுவன தலைவரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பிரான்சிஸ்கோ டி ஷோசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 1994ம் ஆண்டு 175 ஊழியர்களுடன் துவங்கப்பட்ட தங்கள் நிறுவனம், 16 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்று, தற்போது 1 லட்சம் ஊழியர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாகவும், இது தங்கள் நிறுவனத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றும், இந்த 1 லட்சம் ஊழியர்களில் இந்தியாவின் பங்கு 75 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மைல்கல் வெற்றியைத் தொடர்ந்து, (அடைப்புக்குறிக்குள் ஊழியர்களின் எண்ணிக்கை) மற்ற முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ் (1.74 லட்சம்), இன்போசிஸ் (1.22 லட்சம்) மற்றும் விப்ரோ (1.15 லட்சம்), தங்கள் நிறுவனம் நான்காவது இடத்தை காக்னிஜண்ட் ( 1 லட்சம்) பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தென்கலை - வடகலை பஞ்சாயத்துதான் என்ன?

இன்று சைவம் - வைணவம் ஆகிய இரு மதங்களே இந்தியாவின் பெரும்பான்மை மதங்களாக உள்ளன. இந்த இரண்டு மதங்களுடன் "ஸ்மார்த்தம்"  எனும் வட வேத ...