ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வதில் சில அசௌகரியங்கள் இருந்தாலும் பல நன்மைகள் இருக்கின்றன அதைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.நம் எல்லோருக்கும் விபத்தில் மண்டை ஓட்டைக் காக்க ஹெல்மெட் அணிவது அவசியம் என தெரியும்,அதற்கும் மேலான பயன்கள் ஹெல்மெட் அணிவதால் கிடைக்கும்.
காதுகள்
பாதுகாப்பு: இன்றைய சூழலில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தொடர்ந்து ஹாரன்
உபயோகிக்காமல் யாரும் வண்டி ஓட்டுவதில்லை, ஒருகட்டத்தில்
அதை நம் காதுகள் பழகிக்கொண்டாலும், அவை சீக்கிரமே பழுதாக
வாய்ப்புகள் அதிகம். நல்ல ஹெல்மெட் வாங்கி அணிகிற பட்சத்தில் அது அதிக ஹாரன்
மற்றும் வாகன இரைச்சல் சப்தத்தை வடிகட்டி நம் காதுகளுக்கு அனுப்புகிறது.இதனால்
காதுகளின் ஆரோக்கியம் மேம்படும்.
கண்கள்
பாதுகாப்பு: இன்றைய மாசு நிறைந்த சூழலில் கண் பாதுகாப்பு இன்றி அமையாதது,வெளியே ஹெல்மெட் அணியாமல் சென்று வரும்
யாரும் தங்கள் கண்களில் வந்து தேங்கும் களிம்பு போன்ற அழுக்கை கவனித்திருப்போம்,அது எத்தனை தீங்கானது?,எத்தனை விதமான தூசுகள்
மற்றும் அவற்றை எதிர்க்க சுரக்கும் கண்ணீரின் வடிவம் தான் அந்த களிம்பு,அது போல எத்தனை நாளுக்கு தாக்கு பிடிக்கும் நம் கண்கள்.ஹெல்மெட் அணிந்தால்
மட்டும் போதாது,அதன் வைஸரையும் இறக்கி விட்டு உபயோகிக்க
வேண்டும்,அதை வாரத்துக்கு ஒரு முறை நன்கு சோப் நீரால் இரு
புறமும் துடைத்து உபயோகிக்க வேண்டும். இதனால் நம் கண்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக
இருக்கும், இரவில் பயணிக்கையில் எத்தனை ஹைபீம் வாகன ஒளி
வீச்சிலும் நம் பார்வை மங்கலாக தெரியாது.
முக
பாதுகாப்பு: மேலே கண்களுக்கு சொன்ன அதே தான்,நம் ஊர்
எப்போதுமே கடும் வெயிலுக்கு பெயர் போனது, இன்னும் அக்னி
நட்சத்திரம் காலகட்டங்களில் கேட்கவே வேண்டாம். அத்தகைய காலகட்டத்தில் ஹெல்மெட்
அணியாமல் பயணிப்பது மடமையாகும். காலுக்கு கூட நாம் சாக்ஸ் அணிந்து ஷூ அணிந்தால்
தான் அந்த வெயிலின் சூட்டில் இருந்து ஒருவர் தப்ப முடிகிறது என்கையில் ஒருவர்
தலையை அந்த முழு வெயிலில் பலிகடா ஆக்குவது என்ன நியாயம்? அப்படி
தொடர்ந்து பயணிக்கையில் முகம் தார் போன்ற நிறத்தில்ஆவது நிச்சயம். உதடுகள்
கருத்தும் வெடித்தும் போகும்.முகத்தில் படியும் பிசுக்கு புழுதியினால் கட்டிகள்,வெடிப்பு போல பல சரும நோய்கள் வரும் அது கழுத்துக்கும் இறங்கி உடல்
முழுக்க பரவ வாய்ப்பு உண்டு.ஹெல்மெட் அணிவதால் அவை தடுக்கப்படும்,ஹெல்மெட் போட்டு பயணித்து, பயணித்து ஒரு கட்டத்தில்
அது நமக்குப் பழகிவிட்டால் போதும்.அதை தவிர்க்கவே மாட்டோம்.
தலை
உஷ்ணமாதலை தடுத்தல்: இன்றைய சூழலில் நாம் உடல் உஷ்ணகுறைபாட்டால் அனுதினம்
அவதிப்படுகிறோம்,யாருக்கும்
வாரத்துக்கு ஒரு முறையேனும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கமே இல்லை, ஹெல்மெட் தொடர்ந்து அணிவதால் அதில் இருக்கும் தெர்மல் இன்ஸுலேஷன் மூலம்
தலை உஷ்ணமாவது குறையும்,
நம்மில்
பலருக்கு இரு சக்கர வாகனத்திலும் காரிலும் பயணிக்கையில் ரியர் வியூ மிரர்கள்
பார்த்து ஓட்டும் பழக்கம் என்பதே இல்லை ,ஆனால்
துபாய் போன்ற நாடுகளில் வாகனம் ஓட்டுபவர் தன்னிச்சையாக எல்லா கண்ணாடிகளையும்
பார்த்து ஓட்டாத வரை அவரை ஃபெயில் செய்து கொண்டே இருப்பார்கள். லைசென்ஸும்
எடுக்கவே முடியாது, இந்த பழக்கம் வாகனம் ஓட்டுபவர் மற்றும்
எதிரே வரும் வாகன ஓட்டியின் பாதுகாப்புக்கு அவசியமாகிறது.ஹெல்மெட் அணிந்து
ஓட்டுகையில் இரண்டு ரியர் வியூ மிரர்களையும் பார்க்காமல் ஒருவர் வண்டி ஓட்டவே
முடியாது, ஆகையால் ஹெல்மெட் அணிவது விபத்து நேராமல்
தடுக்கவும் வழி செய்கிறது.
ஹெல்மெட்
அணிந்தால் முடி கொட்டுதலைத் தவிர்க்க ஹெல்மெட் அணியும் முன்னர் கர்சீப்
கட்டிக்கொள்ளலாம், ஹெல்மெட்டுக்குள்
அணியும் ஸ்கால்ப் கேப் வாங்கி அணியலாம், நல்ல நிறுவனத்தின்
உறுதியான,ஆனால் எடை குறைவான ஹெல்மெட் வாங்கி அணிகிற
பட்சத்தில் தலைமுடி உதிர்தலை தடுக்கலாம்.தலை வலி, கழுத்து
வலியில் இருந்தும் தப்பலாம்.
ஹெல்மெட்
வாங்குகையில் நல்ல தரமான ஹெல்மெட்டை வாங்கவும்,இன்றைய சூழலில் குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவழித்தால் தான் தலையை நிஜமாகவே
விபத்தில் காக்கும் ஹெல்மெட் கிடைக்கும்.அது செலவல்ல ஆயுள் சேமிப்பு என்பதை
உணர்ந்து வாங்கி அதை பராமரித்து அணியுங்கள். 300 ரூபாய்க்கு
கிடைக்கும் சீனத் தயாரிப்பு ஹெல்மெட்டை 200 ரூபாய்க்கு
கொள்முதல் செய்திருப்பார்கள்,அதில் என்ன தரம் இருந்து
விடப்போகிறது? எனவே தரமான ஹெல்மெட்டையே வாங்கவும்.
இருசக்கர
வாகனத்தில் எங்கே சென்றாலும் ஹெல்மெட்டை கொண்டு செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள், ஸ்கூட்டர்களாக இருந்தால் வண்டியினுள்
பூட்டிச்செல்லுங்கள், பைக் எனில் வண்டியின் வெளியே இருக்கும்
லாக்கில் பூட்டிச்செல்லுங்கள்,
வண்டியின்
நிறத்திலேயே ஹெல்மெட் வாங்குவது அதை வண்டியின் அங்கமாகவே நினைக்க வைக்கும், காருக்கு சீட்பெல்ட் எத்தனை
அத்தியாவசியமானதோ, இரு சக்கர வாகனத்துக்கு ஹெல்மெட்
அத்தியாவசியமானது என உணருங்கள். பின்னர் ஹெல்மெட் உபயோகம் மெல்லப் பழகிவிடும்.
எல்லாவற்றுக்கும்
மேலாக ஹெல்மெட்டை ஸ்ட்ராப் பட்டை பூட்டாமல் அணிவது பிரயோஜனமே இல்லை, விபத்தில் வாகனம் கீழே விழுந்தவுடன்
ஹெல்மெட் எகிறி தூர போய் விழுந்து விடும், எனவே எத்தனை
அவசரம் என்றாலும் ஹெல்மெட்டை ஸ்ட்ராப் பட்டை பூட்டி அணியவும்.இன்று நீங்கள்
சாலையில் செல்கையில் கவனியுங்கள் பத்துக்கு எட்டு பேர் ஸ்ட்ராப் பட்டையை பூட்டாமல்
அணிகின்றனர், நடுசாலையில் பயணிக்கையில் போலீசார் சோதனைக்கு
நிற்பதைப் பார்த்து வண்டி ஓடுகையிலேயே ஒற்றைக்கையால் ஹெல்மெட்டை அணிகின்றனர்.இது
மிகவும் ஆபத்தானது.
#ஹெல்மெட் #பாதுகாப்பு #உயிர்க்கவசம் #கண் #காது #விபத்து #helmet #protection #eye #ear #accident
No comments:
Post a Comment