பூமியில் உள்ள மொத்த நீரில் 97 சதவீதம் கடல் நீர் தான். பல வழிகளிலும் நன்மை அளிக்கும் கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ம் தேதி, உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் கடலில் தான் அதிக சரக்கு போக்குவரத்து நடக்கிறது. உலகில் 10 கோடி பேர் தினமும், உணவு, வருமானத்துக்கு கடலை நம்பியே உள்ளனர். கடலில் பல அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன.
மனிதர்கள்
வெளியிடும் கார்பன் டை ஆக்சைடில் 30 சதவீதத்தை கடல் எடுத்துக்கொண்டு, பூமி வெப்பமடைவதை குறைக்கிறது.
கடல்
மூலமாக 70 சதவீத ஆக்சிஜன் கிடைக்கிறது.
உலகில்
ஆண்டுதோறும் 80 லட்சம் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கின்றன.
உலகில்
300 கோடி பேருக்கு கடல் உணவு மூலம் புரோட்டின் கிடைக்கிறது.
கடல்
தான் நம் பூமியின் குளிர்சாதனப் பெட்டி, அழகிய நீலவண்ண வானம்
தெரிவதற்குக் காரணமே கடல் தான். அதை விட மூன்றில் ஒருபங்கு நிலத்திற்கு
மழைநீரைக்கொடுத்து வளமாக்குவதும் இந்த கடல்தான் இது பொதுவாக அனைவருக்கு தெரிந்த
ஒன்று தான். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக நமது புவியின் குளிர்சாதனப்பெட்டி பல
இடங்களில் பழுதடைந்து வருகிறது.
கடல்
நீரோட்டம் கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
விளைநிலத்திற்கு நதிநீரின் முக்கியத்துவம் எப்படியோ அதேபோல் கடல் வாழ்
உயிரினங்களுக்கும் கடல் நீரோட்டம் மிகவும் முக்கியமானதாகும். 1980 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவைச் சேர்ந்த
என்ரிக் ஜொர்மிலோ என்பவர் உலகத்திற்கு ஒரு உண்மையை எடுத்துக் கூறினார். அதாவது
தெற்கில் உள்ள பனிப் பாறைகள் உருகி வருகின்றன.
அதுவும்
மிகவும் விரைவாக உருகி வருகின்றன. பொதுவாக புவி வெப்பமய மாதல் என்ற ஒரு ஆபத்து
மனித குலத்தின் மீது படர்ந்து நிற்கிறது. இது அனைவரும் அறிந்ததே ஆனால் கடலில்
உள்ளே இருந்தும் ஒரு ஆபத்து சூழ்ந்து கொண்டு வருகிறது. அது கடல் நீரோட்டங்களில்
ஏற்படும் மாற்றம். இதை முதல் முதலாக என்ரிக் ஜொர்மிலோ கூறியபோது, உலகம் நம்பவில்லை. ஆனால் 1998 ஆம் ஆண்டு அமெரிக்க
கண்டம் முழு வதும் ஏற்பட்ட வெப்ப மாற்றம் , கடல்பாசி மற்றும் கிரில்ஸ், ஈரால்கள் மற்றும் பவளப்பாறைகள் பாதிக்கப் பட்டன.
இவை
அனைத்தும் கடலில் சேரும் கழிவுகளைச் சாப்பிட்டு கடலை தூய்மைப்படுத்தும் பணியைச்
செய்யும் உயிரினமாகும். இந்த உயிரினத்தின் பாதிப்பால் அட்லாண்டிக் மற்றும் பசிபிக்
கடலில் கரையோரப் பகுதிகள் மிகவும் அதிமாக அசுத்தங்கள் சேர்ந்துவிட்டது. விளைவு
ஆசிய மற்றும் அமெரிக்க கடற்கரையோரப் பகுதி நாடுகளில் சுவாசம் தொடர்பான நோய்கள்
பெரிதும் பரவத் துவங்கிவிட்டது. உலக
சுகாதார மையம் எச்சரிக்கை விடும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டதால், கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உலக
நாடுகளுக்கு ஏற்படத் துவங்கியது.
இதன்
விளைவாக 8 ஜூன் 1992 அன்று பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ என்ற இடத்தில்
நடைபெற்ற பூமி கூட்டு மாநாட்டில் (Earth Summit) உலக கடல் தினம் (World Ocean Day) கடைபிடிப்பது என்று முடிவெடுக்கப் பட்டது.
ஐநா
சபை கடல் பாதுகாப்பை வலியுறுத்தி 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி
நடைபெற்ற மால்டாவில் நடந்த உலக கடற்கரைப் பாதுகாப்பு மாநாட்டின் கூட்டுக் கூட்டத்தில் முதல் ஜூன் 8 ஆம் தேதி
உலக கடல்கள் தினமாக (World Ocean Day) அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் கடல்
பாதுகாப்பில் தங்களுடைய பங்கை அதிகம் செலுத்தி வருகின்றனர்.
ஆறுகளை
தூய்மைப்படுத்துவது போல் நாம் கடல்களை தூய்மைப்படுத்தவேண்டும். கடந்த சில ஆண்டுகளாக நமது சென்னைக் கடற்கரையில்
குளிர்பிரதேச டால்பின்கள் வருவதற்கு காரணம் என்ன தெரியுமா, வங்காள விரிகுடாக்கடலில் வெப்ப நீரோட்டத்தில்
மாற்றம் ஏற்பட்டதால் அண்டார்டிக்
கடற்பகுதியில் உள்ள டால்பின்கள் தடம் மாறத் துவங்கிவிட்டது. இது நிலநடுக்கோட்டுப்
பகுதியில் உள்ள நாடுகளில் பருவ நிலையை மாற்றிவிடும்.
வறட்சியை
நாம் எதிர்நோக்க வேண்டி இருக்கும்.
இதுபோன்ற ஆபத்துகளை நாம் களைய வேண்டு மென்றால் கடலைப்
பாதுகாக்கவேண்டும். பாதுகாக்கத் தவறினால்
நமது எதிர்காலத் தலை முறைக்கு நீலநிற கடலுக்கு மாற்றாக கருமையான அசுத்தங்கள்
படர்ந்த அமில நீரையும் எப்போதும் இருள் சூழ்ந்த வானத்தையும், ஆக்சிஜன் இல்லாத பூமியையும் நாம் விட்டுச் செல்வோம்.
No comments:
Post a Comment